தனி அணி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் மட்டும்தானா? மலேசியாவில் கூட்டணியை உறுதி செய்த விஜய்!
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தவெக கூட்டணி தொடர்பாக விஜய் சூசகமாக பேசி இருக்கிறார். நான் எப்போது தனியாக வந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிய விஜய், 33 ஆண்டுகளாகவே அணியாகத் தானே வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைப்பது உறுதி என்ற பேச்சுகள் தொடங்கி இருக்கின்றன.
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன், பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபி டியோல், பிரியாமணி, நரேன், ஆண்ட்ரியா, பிரபுதேவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மலேசியா காவல்துறை அரசியல் பேசக் கூடாது என்ற விதியை விதித்திருந்தது. ஆனால் விஜய் பேசுகையில், வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும். சும்மா வருவோர் போவோரை எல்லாம் எதிர்க்க முடியாது. வலுவானவரை எதிர்க்கும் போதுதான் ஜெயிக்கிற அளவு வலு நமக்குவரும். விஜய் தனியா வருவாரா அணியா வருவாரா என்று அடிக்கடி கேட்கிறார்கள்.
நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக உங்களோடு தானே இருந்திருக்கிறேன். எனவே நாம் ஒரு மிகப்பெரிய அணி தானே? இப்போது கூட வெளிப்படையாக எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாரே என்ற கேள்வி எழலாம். சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால் தானே கிக் இருக்கும். இதையெல்லாம் கைத்தட்டலுக்காக சொல்லவில்லை. மக்களுக்காகவே பேசுகிறேன். செய்வதை மட்டுமே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
விஜய்யின் இந்த பேச்சு பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. இதன் மூலமாக 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று விஜய் பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று செங்கோட்டையன் ஒப்புக் கொண்டிருந்தார்.
அதனால் இந்த கட்சிகள் தவெக தலைமையில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமிய கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை செங்கோட்டையன் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் மேற்கொண்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.
இதனால் தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான 3வது அணி அமையலாம் என்று கருதப்படுகிறது. வலுவான 3வது அணி அமையும் பட்சத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வியை 100, 200 வாக்குகள் கூட தீர்மானிக்கும் சூழல் உருவாகும். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் 2016 சட்டசபைத் தேர்தல் களம் போன்ற சூழலில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications