Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கும் சந்தேகமே வேண்டாம்! விவசாய உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைக்கும் -ஜவாஹிருல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாய உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைக்கும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் மனம் குளிரும் அறிவிப்புகளை நேற்றைய தினம் திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

4,418 கிமீ தூரம்

4,418 கிமீ தூரம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் நீர் வழித்தடங்களில் சுமார் 4,418 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,580 கிமீ தூரத்தில் சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறுவை சாகுபடி

குறுவை சாகுபடி

மேட்டூர் அணையும் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 5.20 லட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும்சாகுபடி பரப்பு கூடுதலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி படுகை மாவட்டங்களில் தூர்வாரும் இடங்களைப் பார்வையிட்ட பிறகு திருச்சியில்செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் மனங்குளிரும்அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.

என்னென்ன அறிவிப்பு?

என்னென்ன அறிவிப்பு?

கடந்த ஆண்டில் குறுவையில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் மற்றும் சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுப்பயிர்கள் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. அதே சாதனைகள் இந்த ஆண்டும் தொடரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும், மேலும் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ. 47 கோடி ஒதுக்கீட்டில் முழு மானியவிலையில் வழங்கப்படும் என்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சாதனை நிகழ்த்தும்

சாதனை நிகழ்த்தும்

நீர் வழித்தடங்களில் சிறப்பான திட்டமிடலுடன் நடைபெற்றுள்ள தூர் வாரும் பணிகளாலும், மானிய விலையில் உரங்கள், விதைகள், விவசாய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலமாகவும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு விவசாய பயிர்கள் உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப்பயணித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+