ஒரு காலத்தில் அதிமுகவின் “பவர் சென்டர்”.. 3ஆக சிதறிய ஜெயலலிதாவின் “ஐவர் அணி” -யார் யார் எந்த பக்கம்?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சிப் பூசல் பூதாகரம் எடுத்து இருக்கும் நிலையில், ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ஐவர் அணியில் இடம்பெற்று கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த 5 தலைவர்களில் தற்போது யார் யார் எந்த பக்கம் உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை வெளியே தெரியாத அதிமுகவின் அமைச்சர்கள், மூத்த தலைவர்களின் பெயர்கள் அவர் உயிரிழந்ததற்கு பிறகே வெளியில் தெரிந்ததாக மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பேச்சு உள்ளது. அதே நேரம் ஜெயலலிதாவுடன் சசிகலா நெருக்கமாக இருந்தபோது அதிமுகவை மன்னார்குடி குடும்பமே கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் பலர் பேசினர்.
ஆனால், ஜெயலலிதா உயிரிழந்த பிறகு காட்சிகள் மாறின. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சசிகலா குடும்பம் பின்னர் ஓரம்கட்டப்பட்டது. குறிப்பிட்ட தொகுதி, மாவட்டத்தை தாண்டி யார் என்று தெரியாத அதிமுக அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் பலர் ஊடகங்களில் தொடர்ந்து தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமான முகமாக தங்களை மாற்றிக்கொண்டார்கள்.

ஐவர் அணி
ஆனால், ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவிலும், தங்கள் மாவட்டங்களை தாண்டியும் செல்வாக்குடன் 5 தலைவர்கள் இருந்தார்கள். கட்சியின் எத்தகைய முடிவாக இருந்தாலும் அவர்களிடம் ஆலோசித்த பிறகே ஜெயலலிதா முடிவு செய்து வந்தார். குறிப்பாக தேர்தல் காலங்களில் இவர்கள் பரிந்துரைக்கும் நபர்களே அதிமுகவின் வேட்பாளர்களாகவும் தேர்வு செய்யப்படும் அளவுக்கு இவர்கள் கை ஓங்கி இருந்தது.

ஜெயலலிதாவின் ஆக்ஷன்
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை பரிந்துரைத்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2016 தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த ஜெயலலிதா ஐவர் அணியை கலைத்து நிர்வாகிகள் வீட்டிலேயே ரெய்டுகளை நடத்த உத்தரவிட்டார். இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

யார் அந்த 5 பேர்?
இந்த ஐவர் அணியில் முதலாம் நபர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 2 ஆம் நபர் நத்தம் விஸ்வநாதன். 3 ஆம் நபர் வைத்திலிங்கம். 4 ஆம் நபர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 5 ஆம் நபர் பழனியப்பன். 2016 தேர்தலில் நத்தம் விஸ்வநாதனும், வைத்திலிங்கமும் தோல்வியை தழுவினர். பழனியப்பனுக்கு அமைச்சரவை பதவி மறுக்கப்பட்டது.

உடைந்த அதிமுக
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்தது. இந்த சூழலில்தான் ஜெயலலிதா அடுத்த சில மாதங்களிலேயே உயிரிழந்தார். கட்சியும் மூன்றாக உடைந்தது. இதில் ஜெயலலிதாவின் ஐவர் அணியை சேர்ந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தற்போது தனித்தனி அணிகள் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி பிரிந்து சென்றபோது சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்தார். அப்போது சசிகலா அணியில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் இருந்து வந்தார். ஒருவேளை வைத்திலிங்கம் அப்போது எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் அவர்தான் எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருப்பார் என்ற பேச்சு அப்போது அதிமுக மற்றும் டெல்டா வட்டாரத்தில் எழுந்தது.

அணி மாறல்
ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் குழு சென்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், தற்போது ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்திருக்கும் சூழலில் தற்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்று இருக்கிறார். அண்மையில் அவர் ஓபிஎஸ்-ஆல் இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
Recommended Video

விஸ்வநாதன், பழனியப்பன்
ஐவர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கதையும் வைத்திலிங்கத்தை போன்றதே. தர்மயுத்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்று இருந்த நத்தம் விஸ்வநாதன் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார். மற்றொரு நபரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மட்டும் நீண்டகாலமாக தினகரன் அணியில் இருந்துவிட்டு அமமுகவில் சேர்ந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் தினகரனைவிட்டு பிரிந்து திமுகவில் இணைந்துவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications