திமுகவின் ஸ்லீப்பர் செல்! ஆதவ் அர்ஜுனாவை நம்பாதீங்க விஜய்! மச்சான் ஜோஸ் சார்லஸ் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என அவரது மைத்துனரும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் (LJK) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆதவ் அர்ஜுனா தவெக-விற்குள் நுழைந்தது சேவையாற்ற அல்ல; அவர் திமுகவின் ஒரு 'ஸ்லீப்பர் செல்' (Sleeper Cell). விஜய்யையும் அவரது கட்சியையும் வேரோடு அழிப்பதற்காகவே ஒரு திட்டத்துடன் அவர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

கூட்டணிக்கு முட்டுக்கட்டை: தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைத் தடுத்து, அக்கட்சியைத் தனிமைப்படுத்துவதே ஆதவ் அர்ஜுனாவின் முக்கிய வேலை.
விஜய்யை திசை திருப்புதல்: விஜய்க்கு தவறான தகவல்களை வழங்கி, மக்கள் ஆதரவை எதிரணிக்குச் சாதகமாக மாற்றும் சதிவேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிதைப்பு: கட்சியில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகிகளை ஓரம் கட்டிவிட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்.
கரூர் துயர சம்பவத்தில் 41 அப்பாவி உயிர்கள் பறிபோன கோர சம்பவத்திற்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் ஆதவ் அர்ஜுனாதான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
எங்கள் குடும்பத்தை பிரித்தது போல் விஜய் குடும்பத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆதவ் அர்ஜுனா செய்ய தயங்கவே மாட்டார் என்றும் ஜோஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
யார் இந்த ஜோஸ்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளான டெய்சியைத் திருமணம் செய்தவர் ஆதவ் அர்ஜுனா. "எங்கள் குடும்பத் தொழிலைக் கைப்பற்ற முயன்றவர், இப்போது அரசியலிலும் அதே அதிகாரப் பசியுடன் செயல்படுகிறார். திமுகவின் முக்கியப் புள்ளிகளின் வழிகாட்டுதலின் பேரில், விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை சிதைக்கவே அவர் முயன்று வருகிறார்" எனத் தனது மச்சான் மீதே ஜோஸ் சார்லஸ் பகீர் கிளப்பியுள்ளார்.
விஜய்யின் நம்பிக்கைக்குரிய 'வலதுகரம்' என்று கருதப்படும் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது குடும்ப உறவினரே 'ஸ்லீப்பர் செல்' முத்திரை குத்தியிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா யார்?
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் பெயர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆவார். முன்னாள் கூடைப்பந்து வீரராகவும், விளையாட்டு நிர்வாகியாகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் புகழ்பெற்றவர்.
திருச்சியை சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே (5 வயதில்) தாயாரை இழந்தார். ஒய்.டபிள்யூ.சி.ஏ., திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளி.
உயர்கல்வி: சென்னை மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியல் இளங்கலை படித்துள்ளார்.
விளையாட்டுத் துறை பங்களிப்பு
இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்.
தற்போது இந்திய கூடைப்பந்து சங்கம் (BFI) தலைவர், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தலைவர்
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் பொதுச் செயலாளர் என பல்வேறு பதவிகளில் உள்ளார்.
தேர்தல் வியூக நிபுணராக பல கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியவர். Voice of Commons என்ற அமைப்பை நிறுவி இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தியவர். 2024-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவுக்கு எதிரான கடுமையான விமர்சனப் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கட்சியிலிருந்து விலகினார்.
2025 பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் (TVK)-யில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா?












Click it and Unblock the Notifications