சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 45.09% பேர் ஆதரவு- ஜூனியர் விகடன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 45.09% ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அணி 163 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

Junior Vikatan Survey respondents prefer MK Stalin to be TN Chief Minsiter

அதிமுக அணி மொத்தம் 52 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது இக்கருத்து கணிப்பு முடிவு.

மக்கள் நீதி மய்யம் மட்டும் 1 இடத்தில் வெல்லும்; 18 தொகுதிகளில் இழுபறி நிலைமை நீடிக்கும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லையாம்.

மேலும் எதிர்கால அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின்தான் என 43.21% பேர் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 29.20%; சீமான் - 8.18%; கமல்ஹாசன் 7.01%; தினகரன் - 6.67% அன்புமணி ராமதாஸ் 1.46%; ஓபிஎஸ்- 0.99; எல். முருகன் 0.31%; என கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு ஆம் என 70.89% பேர் கூறியுள்ளனர். ஆட்சி மாற்றம் தேவை இல்லை என்பது 29.11% பேரின் கருத்து.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 45,09% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி 30.11%; டிடிவி தினகரன் 8.96%; சீமான் 8.71%; கமல்ஹாசன் 7.13% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு.

English summary
Junior Vikatan Survey respondents prefered DMK President MK Stalin to be the next Tamilnadu Chief Minsiter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X