"ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிறோம்.. ஆனால்”.. நீதிபதி GR சுவாமிநாதன் சொன்ன கட்டுரையில் என்ன இருந்தது?
சென்னை: “நாம் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிறோம். அப்படியெல்லாம் இப்போ இல்லை, மனம் ஒத்துப் போனால் ஒருத்தர் பலருடன் இருக்கலாம் என்பதை எத்திகல் என்பதுபோல் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள்” என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு பக்கக் கட்டுரையைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேச்சு
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசுகையில்,"நமது தேசத்திற்கான ஒரு பாரம்பரியம் உள்ளது. அறம் சார்ந்த வாழ்க்கையை நம்பி வருகிறோம். நாம் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஆனால், ஓர் ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில், கணவன் மனைவி இருவரும் விரும்பினால் பலருடன் சேர்ந்து வாழலாம் என்பதாக கூறப்பட்டிருந்தது.
நமது சமுதாயம் சீர்கேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. நமது சமுதாயத்திற்கு அடிப்படையாக உள்ளது குடும்ப வாழ்க்கை தான். குடும்ப வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமானால் தியானத்தோடு இயைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும்" எனப் பேசியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் கட்டுரை
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறிப்பிட்டுச் சொன்ன அந்தக் கட்டுரையில், தற்காலச் சூழலில் தம்பதிகள் இடையேயான உறவுகள் குறித்து அலசப்பட்டு உள்ளது. ENM எனப்படும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு மேற்கொள்ளும் பல்லுறவு முயற்சிகள், தற்போதைய சூழலில் அது இரண்டாம் நிலை நகரங்களுக்கும் பரவி வருவது பற்றி விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 30 வயதான தொழில்முனைவோர் மதன் ராஜ் மற்றும் அவரது மனைவி வந்தனா ராஜ் இருவரும் இணைந்து, தனித்தனியாக ஒரு பிரபலமான டேட்டிங் செயலியில் இருக்கிறார்கள். இது சற்று குழப்பமாகத் தோன்றினால், நீங்கள் இப்போதுதான் 'எத்திகல் பல்லுறவு' (Ethical Non-Monogamy) எனப்படும் உறவுமுறை உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன், தாம் டேட்டிங் செய்யும் மற்றவர்களிடமும் வெளிப்படையாகவே செயல்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENM உறவு
"பள்ளிப் பருவக் காதலர்களாகிய நாங்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டோம். ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் இருக்கும்போதே, மற்றவர்களுடன் டேட்டிங் செய்வதற்கான விருப்பம் இருந்ததை உணர்ந்தோம்," என மதன் ராஜ் கூறுகிறார். ENM என ஆன்லைன் டேட்டிங் உலகில் பிரபலமாக அறியப்படும் இந்த உறவுமுறை, கடந்த 15 ஆண்டுகளாகத் திருமணமான தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நிலை, இந்த உறவுமுறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது. இப்போக்கு இந்தியப் பெருநகரங்களில் மட்டுமல்லாது, கவுஹாத்தி, லக்னோ, பரேலி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் பரவி வருகிறது. ENM என்பது, ஒரு ஜோடி தங்கள் உறவை மற்ற காதலர்களைத் தேட திறம்பட வழிவகுப்பதாகும். இது தெளிவான விதிகள் மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லைகளுக்கு உட்பட்டது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரஸ்பர சம்மத்தோடு ENM
பெங்களூரைச் சேர்ந்த திருமண ஆலோசகர் வித்யா ஜெபராஜ், "ஆரோக்கியமான எல்லைகள், தெளிவான தொடர்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை எந்த உறவின் அடிப்படைக் கற்கள். ஒரு திருமணத்தை வெளிப்படையாகப் பார்க்கும்போது, விதிகள், தெளிவு, தகவல்தொடர்பு ஆகியவற்றின் தேவை இன்னும் அவசியமாகிறது," எனக் கூறியுள்ளார்.
"திருமணமாகி ஒரு பத்தாண்டிற்குப் பிறகும், இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எங்கள் உறவை வெளிப்படுத்தினோம். எங்கள் ENM தெளிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வாழ்க்கையையோ குழந்தைகளையோ எதுவும் பாதிக்காது. இது நம்பிக்கையை அதிகரித்ததுடன், எங்களை மேலும் மகிழ்ச்சியாகவும் ஆக்கியுள்ளது," என்று சென்னையைச் சேர்ந்த 40 வயது செல்வம் துரை குறிப்பிட்டுள்ளார்.
சிறு நகரங்களிலும் இந்த உறவு
சென்னை மட்டுமின்றி சேலம், மதுரை, கோவை, திருச்சி போன்ற சிறிய நகரங்களிலும் இளம் தம்பதிகள் ENMஐ ஆராய்வதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது. பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஆணாதிக்கக் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது கணவர்கள் ENMஐ வெளிப்படையாக ஆராய வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பெண்கள் தயக்கத்துடன் இதில் ஈடுபடுகின்றனர் அல்லது மற்ற ஆண்களுடன் விருப்பத்துடன் டேட்டிங் செய்யாமல், தங்கள் கணவர்களின் இந்த விருப்பத்திற்கு சில சமயம் சம்மதத்தோடு அல்லது எதிர்ப்புடனோ செயல்படுகின்றனர். சிறிய நகரங்களில் நேர்காணல் செய்யப்பட்ட எட்டு தம்பதிகளில் இருவர் மட்டுமே, கணவர் மற்றும் மனைவி இருவரும் சமமான ஆர்வத்துடன் ENMஐ ஆராய்ந்ததாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில், திருமணமான தம்பதிகளிடையே ENM ஒரு முரண்பாடான நிலையில் தொடர்ந்து உள்ளது. ஆனால் தொடர்ந்து நிலவும் சமூகக் களங்கம் காரணமாக, தம்பதிகள் இதை ரகசியமாகவே மேற்கொள்கின்றனர். புதிய உறவு இயக்கவியலை அணுகும் மனப்பான்மைகளில் மாற்றம் காணப்பட்டாலும், உண்மையான நடைமுறை பெரும்பாலும் மறைமுகமாகவே உள்ளது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications