Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என, முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை அதிகளவில் அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனுக்கள் அளித்து கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் அவர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஜனநாயக திருவிழா களை கட்டியுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஆளும் திமுக இந்த முறை மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

சட்டசபை தேர்தல்
திமுக கூட்டணியில் 20 க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில், தொகுதி பங்கீட்டை முடிப்பதில் வேகம் காட்டி வருகிறது. அதிமுகவும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறது. போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சட்டசபை தேர்தலில் களமிறங்கும் கனிமொழி
இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக திமுகவில் கனிமொழி பெயரில் அதிகளவில் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தேசிய அரசியலுக்கு குட்பை சொல்லிவிட்டு மாநில அரசியலுக்குள் கவனம் செலுத்த கனிமொழி முடிவு செய்துவிட்டாரா? என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. கட்சியினர் இது தொடர்பாக நேரில் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் புன்னகையை மட்டுமே பதிலாக தந்து வருகிறார் கனிமொழி.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி
இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழர் ஆட்சிக்கழகம் என்ற அமைப்பின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், கனிமொழி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும், சாதிய சிந்தனை, மதவாத சிந்தனை அற்றவர் கனிமொழி எனக் கூறி டெல்லி அரசியலிலிருந்து தமிழக அரசியலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கனிமொழியை பொறுத்தவரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் நெருடல் ஏற்பட்ட தருணத்தில் சோனியா காந்தி மூலம் நிலைமையை சுமூகமாக மாற்றியதிலும் அவருக்கு பங்குண்டு. இதனிடையே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளதால் தற்போதைய சூழலில் சட்டசபைத் தேர்தலில் கனிமொழி களமிறங்குவது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூரில் கனிமொழி போட்டியிடுவாரா?
இருப்பினும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே அரசியல் என்பதால் இந்த விவகாரம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மநில அரசியலில் எண்ட்ரி கொடுத்தால் எந்த தொகுதியில் கனிமொழி போட்டியிடலாம் என்பது தொடர்பாக கட்சியினர் மத்தியில் பெரும் விவாதமே எழத்தொடங்கியுள்ளது.
தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக கனிமொழி உள்ளார். இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக கனிமொழி வென்றுள்ளார். ஒருவேளை சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஒகே சொன்னால், தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
திருச்செந்தூர் சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என அதிக அளவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த தொகுதியில் கனிமொழி போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. எது எப்படியோ இந்த கேள்விகளுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் விடை கிடைத்துவிடும்.
-
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக












Click it and Unblock the Notifications