Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்ன்னா ரொம்ப பிடிக்கும்.. அவரை ஏதாவது சொல்லிட்டா அவ்வளவுதான்.. கள்ளக்குறிச்சி மாணவி தாய் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் அவரை ஏதாவது சொல்லிவிட்டால் சண்டை போடுவாள் என்றும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்த பிளஸ் 2 மாணவி மரணமடைந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரும் தெரிவித்து வந்தனர்.

மாணவியின் உடல் இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. தனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாய் பேட்டி அளித்துள்ளார்.

மாணவி மரணம்

மாணவி மரணம்

மாணவி மரணத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புலனாய்வு பத்திரிகையும் ஆய்வு மேற்கொண்டு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தன.

 தவறு

தவறு

இந்த நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலினை மாணவியின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். முதல்வரும் தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்ற உறுதிமொழியை அவர்களுக்கு கொடுத்துள்ளதாக தாய் பேட்டி அளித்தார்.

மாணவியின் தாய் பேட்டி

மாணவியின் தாய் பேட்டி

இந்த நிலையில் தமிழ் தொலைகாட்சிக்கு மாணவியின் தாய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் மகள் நல்லா பாட்டு பாடுவாள். ஒரு படம் என எடுத்துக் கொண்டால் அதன் இசையமைப்பாளர் யாரு உள்ளிட்ட விஷயங்களை அலசுவாள். நடிகர் விஜய்யை அவளுக்கு மிகவும் பிடிக்கும். விஜய் பாட்டுக்கு நல்லா டான்ஸ் ஆடுவாள்.

விஜய் பாட்டுக்கு டான்ஸ்

விஜய் பாட்டுக்கு டான்ஸ்


விஜய்யை யாராவது ஏதாவது சொல்லிட்டா போதும் கோபம் வரும். என் மகனுக்கு பெயர் வைத்ததும் அவள்தான். எப்பயாவது தம்பியுடன் சண்டை போட்டால் உனக்கு பேரு வச்சதே நான்தான்டா என்பார் என மாணவியின் தாயார் தனது மகள் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+