சசிகலா, டிடிவியை விரட்டுனீங்களே.. அதே நிலைதான் உங்களுக்கும் வரும்.. இபிஎஸ்ஸுக்கு "குன்னம்" அறிவுரை
சென்னை: ஒற்றைத் தலைமையை தூண்டிவிட்டால் சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராமசந்திரன் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை அடைந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசாத ஒற்றைத் தலைமை விவகாரத்தை பேசியதாக ஜெயக்குமார் பொது வெளியில் கூறியதால் கடந்த 5 நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கட்சியில் ஒரு சாரார் எடப்பாடி பழனிச்சாமிதான் ஒற்றைத் தலைமை என்றும் மறுசாரார் ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை என்றும் முழக்கமிடுகிறார்கள்.

நடுநிலைவாதிகள்
அதே வேளையில் நடுநிலைவாதிகள் இரட்டை தலைமையே போதும் என்கிறார்கள். இன்னும் சிலர் எடப்பாடியும் வேண்டாம் ஓபிஎஸ்ஸும் வேண்டாம், 3ஆவது நபர் தலைவராக வேண்டும் என்கிறார்கள். இப்படியாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் ஒரு நிர்வாகி ரத்தம் பார்க்கும் நிலைக்கு சென்றது.

ஓபிஎஸ்
இந்த நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ்ஸை சந்தித்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்திதான் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இரட்டை தலைமை எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

ஒற்றைத் தலைமை
ஆனால் திடீரென ஒற்றைத் தலைமை வேண்டும் என சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். குறிப்பாக அந்த இரட்டையர்கள்தான். கட்சியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரட்டை தலைமை
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இரட்டை தலைமைதான் வேண்டும் என ஓபிஎஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்துவிட்டார். அது போல் எடப்பாடியும் தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் மவுனம் காப்பது ஏன்? ஒற்றைத் தலைமை வேண்டுமா, வேண்டாமா என்பதை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

சசிகலா, டிடிவி தினகரன்
இதில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் தலையிட கூடாது. ஒற்றைத் தலைமை குழப்பத்தை இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கும் இருவர் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். முதலில் சசிகலாவை கட்சியை விட்டு அனுப்பினார்கள். பின்னர் டிடிவி தினகரனையும் அனுப்பினார்கள். பிறகு ஓபிஎஸ்ஸுடன் இணைந்து 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்தார். ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட நினைத்தால் சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நடக்கும் என்பதை மறக்க வேண்டாம் என்றார் ராமசந்திரன்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன்












Click it and Unblock the Notifications