சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறைகளை மட்டும் தொடரலாம்- உரிமம் வழங்க கூடாது: ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து உத்தரவிட்டார்.

Recommended Video

    Tasmac Issue | இந்தியா முழுவதுமே கொள்கை முடிவு எடுங்க - Senthil Balaji *Politics | Oneindia Tamil

    டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. ஆனால் இதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

    Madras HC allows to continue TASMAC Bar Tender Process

    டாஸ்மாக் பார்கள் டெண்டர் விடப்படாமலேயே பல இடங்களில் ஏற்கனவே நடத்தி வருகிறவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என்பதும் ஒரு புகார். அதேநேரத்தில் தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2-ந் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்க்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை; ஆனால் பார் நடத்தப்படும் இடத்துக்கான நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியான நிலையில் திடீரென பார் நடத்தும் இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க நிர்ப்பந்திக்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும், டெண்டரை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும், டெண்டர் வழங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும் இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 26-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    English summary
    The Madras High Court allowed to continue the TASMAC Bar Tender Process.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X