ரூ.1.5 கோடி அபராதம்.. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக விஜய் கோரிக்கை.. அனுமதி அளித்தது ஐகோர்ட்!
சென்னை: 'புலி' படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் ரூ.15 கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததாக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் விஜய்க்கு அபராதம் விதித்தது சரியே என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் அணுக சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2016 - 2017 ஆம் நிதியாண்டில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வருமான வரி தாக்கலின் போது 35.42 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவித்திருந்தார். இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தபோது கைப்பற்ற ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என்று கண்டறியப்பட்டது. அதாவது, 'புலி' திரைப்படத்திற்காக விஜய் பெற்ற ஊதியத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டது. எனவே வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஜூன் 30 ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு அபராதம் செலுத்த கோரி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால வரம்பை மீறி வருமானவரித்துறை 2022 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதனால் அந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
வருமான வரித்துறை சார்பில், சட்டப்பிரிவு 271 AAB(1) படி தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி செந்தில்குமார் ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.
விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் சரியே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்கி, விஜய்யின் மனுவையும் தள்ளுபடி செய்தார். நடிகர் விஜய் புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தை சரியாக கணக்கு காட்டவில்லை என்பது நிரூபணமானதால், ஏற்கனவே வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும். இதில் எந்தவித விதிமீறலும் செய்யப்படவில்லை. மேலும் விஜய் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.
அபராத வழக்கில் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய அனுமதிக்க விஜய் தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்து வருமான வரித்தறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (appellate authority) விஜய் அணுகலாம் என நீதிபதி தெரிவித்தார்.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?












Click it and Unblock the Notifications