"கொள்ளைக்கூடாரம்".. உண்டியலில் காசு போடாதீர்கள்..அறநிலையத்துறையை நீக்குங்கள் - மதுரை ஆதீனம் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
சென்னை: ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? என்று மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
துறவியர் மாநாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஆதினங்கள் ஆலோசனை
துறவியர் மாநாட்டில் இந்து சமயத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் 2 நாட்கள் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

துறவியர் மாநாட்டில் தீர்மானம்
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி தீர்மானங்களை வாசித்தார்.

பதிலடி தர வேண்டும்
விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பேசுகையில், இந்துக்கள் அனைவரும் இந்து மதத்தை காக்க ஒன்றுசேர வேண்டும் அதுமட்டுமின்றி இந்துக்களை காப்போம் என சபதம் ஏற்க வேண்டும் என்றார். அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்ரீகோ. ஸ்தாணு மாலயன் பேசுகையில், மக்கள் விழித்தெழ வேண்டும். இந்துக்களை தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

கோவிலுக்குள் என்ன வேலை
இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

உண்டியலில் காசு போடாதீர்கள்
இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும் துறவியர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். அரசியல்வாதிகள்தான் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். இதனால் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாராமாக மாறி வருவதாகவும் கூறிய அவர் கோவில் உண்டியல்களில் மக்கள் காசு போடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜால்ரா போட முடியாது
அரசியல்வாதிகள் ரமலான் பண்டிகைக்கு குல்லா அணிகிறார்கள். நோன்பு கஞ்சி குடிக்கிறார்கள். அதே நேரத்தில் கோவில்களில் கொடுக்கும் விபூதியை கீழே கொட்டுகிறார்கள். 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. கடந்த காலங்களில் கோவில்களில் களவு போன சாமி சிலைகளை பிரதமர் மோடி மீட்டு வருகிறார் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications