சசிகலா மத்தியஸ்தர்! மாமா மருமகன் இணைப்பு விரைவில்! ஒன்றுதிரளும் மன்னார்குடி உறவுகள்!
சென்னை: திவாகரனையும் தினகரனையும் இணைப்பதற்கான முயற்சிகளை மன்னார்குடி உறவுகள் சிலர் முன்னெடுத்து வருகிறார்களாம்.
இனியும் இப்படியே பிரிந்திருந்தால் அது நமக்கு தான் பாதகமாக முடியும் என்பதை அவர்கள் இரண்டு தரப்பிடமும் எடுத்துக் கூறுகிறார்களாம்.
இணைப்பு என்றால் அமமுகவை இணைப்பது என்று நினைத்துவிடாதீர்கள், குடும்ப ரீதியாக உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி தானாம் அது.

குடும்ப ஒற்றுமை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எவ்வாறு பிளவு வந்ததோ அதே போல் சசிகலா குடும்ப உறவுகள் மத்தியிலும் பிளவு வந்தது. மாமன் மருமகனான திவாகரனும் தினகரனும் ஒரு பக்கம் பிரிந்ததோடு அக்கா தம்பியான சசிகலாவும் திவாகரனும் பிரிந்தார்கள். இப்படி ஆளாளுக்கு பிரிந்து குடும்பத்தில் ஒற்றுமையில்லாததை நினைத்து சசிகலா ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார். இதையறிந்த மன்னார்குடி உறவினர்கள் சிலர் முதற்கட்டமாக சசிகலா -திவாகரன் இடையே இணைப்பு பாலமாக நின்று பேசி அக்காவையும் தம்பியையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

இணைக்க முயற்சி
இதன் காரணமாக தான், தாம் நடத்தி வந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவில் நேற்றைய தினம் இணைத்திருக்கிறார் திவாகரன். இனி அடுத்தப்படியாக திவாகரனையும் தினகரனையும் குடும்ப ரீதியாக இணைக்க முயற்சிகள் நடக்கிறதாம். திவாகரணுக்கு மூத்த அக்கா மகன் தான் தினகரன். தற்போதைய அரசியல் சூழலில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணர்ந்து இந்த இணைப்பு படலம் தொடங்கியிருக்கிறதாம்.

லேசான மன வருத்தம்
இதனிடையே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே கூட லேசான மன வருத்தம் இருப்பதால் அதனையும் சரி செய்ய குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் பேசி வருகிறார்களாம். இந்த முயற்சிகள் மட்டும் ஒர்க் அவுட் ஆகிவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு உற்சாகத்துடன் சசிகலா தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து மக்கள் சந்திப்பார் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

நடராஜன் இல்லை
சசிகலாவின் கணவர் நடராஜன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், குடும்ப உறவுகள் இந்தளவுக்கு பிரிந்து சென்றிருக்க விட்டிருக்கமாட்டார். உடனுக்குடன் பேசி முடித்து சுமூகமாக்கிவிடுவார். அந்த ஆற்றலும் திறமையும் அவருக்கு நிறையவே இருந்தது. அவர் இல்லாத குறை தான் இன்று சசிகலாவுக்குமே இவ்வளவு சிக்கல்கள் வந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜ தந்திரத்துடன் காய் நகர்த்தி பேச வேண்டிய இடத்தில் பேசி காரியம் சாதிப்பதில் மிகக் கெட்டிக்காரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications