சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைமை பொறுப்பை மரியானா எல். நெய்ஷுலர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து பேசிய துணைத் தூதர் நெய்ஷுலர், "நமது இருதரப்பு உறவின் இந்த முக்கியமான தருணத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.

அதிபர் டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கோர் ஆகியோரின் தலைமையின் கீழ், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்க வணிகங்களை ஆதரிப்பதற்கும், நமது உறவை மிகவும் வலுவாக்கும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கும் நான் செயலாற்றுவேன்," என்றார்.
சென்னைக்கு வருவதற்கு முன்னர் தாஷ்கண்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக துணைத் தூதர் நெய்ஷுலர் பணியாற்றினார். ஜெருசலேம் மற்றும் ஜோர்டனின் அம்மான் தூதரகங்களில் பொருளாதார துணை ஆலோசகராகவும், வாஷிங்டன் டி.சி., துபாய், ஸ்கோபியே மற்றும் மாஸ்கோவிலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் என்பது தமிழகம், கேரளம், கர்நாடகா, புதுவை, அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கியது. தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் டொனால்ட் டிரம்ப் விசா நடைமுறைகளில் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் மரியானா, முந்தைய பணியின் போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சென்னையில் விசா வாங்குவதற்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் மரியானா ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. அது போல் சென்னை தூதரகம்தான் வேலைக்கான விசாக்களை அதிக அளவில் கையாளும் மையமாக இருக்கிறது. அந்த வேலைக்கான விசாவிலும் டிரம்ப் அதிரடிகளை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் 230 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முன்பு பாரிமுனையில் இயங்கி வந்த நிலையில் இது அண்ணாசாலை ஜெமினி பாலத்தின் அருகே 1969ஆம் ஆண்டு மாற்றலானது.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications