அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான காய்ச்சல்! நலம் விசாரித்த முதல்வர்! இன்று மாலைக்குள் டிஸ்சார்ஜ்!
சென்னை: திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், சட்டசபைக்கு செல்வதற்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனின் உடல்நலம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
இன்று பிற்பகலோ அல்லது மாலையோ துரைமுருகன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்த அவரது ஆதரவாளர்கள்.

துரைமுருகனுக்கு காய்ச்சல்
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கூடவே அவருக்கு உடல்வலியும் இருந்ததால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றபடி பெரியளவில் வேறு எந்தப் பிரச்சனையும் துரைமுருகனுக்கு இல்லை.

நலம் விசாரிப்பு
துரைமுருகனுக்கு காய்ச்சலால் உடல்நலக் குறைவு என்ற தகவல் அறிந்தவுடன் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கே சென்று மருத்துவர்களிடம் துரைமுருகன் உடல்நலம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். துரைமுருகன் நன்றாக இருக்கிறார் என்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல்வரிடம் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

மாலைக்குள் டிஸ்சார்ஜ்
இதனிடையே துரைமுருகன் இன்று மாலைக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். முதலில் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி என செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தியை பார்த்தவுடன் சென்னை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

ஆதரவாளர்கள்
இதையடுத்து துரைமுருகனின் உதவியாளர் உட்பட அவருடன் இருக்கக்கூடிய நபர்களை அழைத்து விசாரித்ததில், துரைமுருகனுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனிடையே யாரும் மருத்துவமனைக்கு வந்து மற்ற நோயாளிகளுக்கு சிரமம் அளிக்க வேண்டாம் என துரைமுருகன் தரப்பில் இருந்து ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி












Click it and Unblock the Notifications