Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் விளையாடிய செஸ்.. ஆதாரத்துடன் கூறிய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கீழடி: கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டம் ஆடுவதற்கான காய்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா சார்பில் விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பாண்ட், ஆர் பி ரமேஷ், அபிஜித் குந்தே ஆகியோர் பயிற்சியில் களம் காண்கிறார்கள். இதில் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னரிலிருந்து வெளிநாட்டு வீரர்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தருகிறார்கள். நாளைய தினம் நேரு உள் விளையாட்டரங்கில் இந்த போட்டியின் துவக்க விழா நடைபெறுகிறது. இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

 தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதல்ல. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர்.

Recommended Video

    Chess Olympiad, MP Suspend, Congress Protest - Today Headlines
    கீழடி அகழ்வாராய்ச்சி

    கீழடி அகழ்வாராய்ச்சி


    கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம்தான் என்றார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில்தான் அந்த கோயில் உள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது. இதன் பெயர் சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகும்.

    சதுரங்க போட்டி

    சதுரங்க போட்டி

    இது 103 ஆவது சிவத்தலமாகும். இந்த கோயிலின் மூலவர் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாக தோன்றினார் அம்பிகை. சிவன் சித்தர் வேடத்தில் வந்து தான்தான் சதுரங்க விளையாட்டில் சிறந்தவன் என கூறினார். இதையடுத்து இருவருக்குமிடையே சதுரங்கம் போட்டி நடந்து அதில் சிவன் வெற்றி பெற்றார் என வரலாறு சொல்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+