தாம்பரம் அருகே வீட்டில் தனியாக பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை...2வது கணவரே செய்த அட்டூழியம்
சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டிப் போட்டு விட்டு பணம், நகை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக பெண் அளித்த புகாரில் சேலையூர் காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவரும், பெண்ணின் 2வது கணவரும் சேர்ந்து கொள்ளை அடித்தது தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் தனியாக இருந்தார்
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் இருந்து வண்டலூர் செல்லும் பாதையில் உள்ளது அகரம்தென். இங்கு குறிஞ்சி நகர் பகுதியில் மரவேலை செய்து வருபவர் ரவி வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், புஷ்பலதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 23ம் தேதி பணிநிமித்தமாக ரவி வேலைக்கு சென்றுவிட அவரது தாய் சுகுணாவும் மேடவாக்கத்திற்கு சென்றுள்ளார். இதனால் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பணம், நகை கொள்ளை
புஷ்பலதா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கணவன், மனைவி வீட்டிற்குள் வந்தனர். புஷ்பலதாவிடம், நாங்கள் உன் தந்தையின் உறவினர்கள் திருமணத்திற்காக பத்திரிகை வைக்க வந்தோம் எனக் கூறி உள்ளனர். அதை நம்பிய புஷ்பலதா பத்திரிகை பெற்றுக்கொள்வதற்காக தாம்பூலத் தட்டை எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். இதை அடுத்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கத்திமுனையில் புஷ்பலதாவை கட்டிப் போட்டனர். பின்னர் பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர்.

போலீஸ் விசாரணை
பின்னர் அவசர அவசரமாக புஷ்பலதாவை கட்டுகளில் இருந்து விடுவித்துவிட்டு வெளியேறினர். இதை அடுத்து வீட்டுக்குத் திரும்பிய தாயிடம் விஷயத்தை சொல்லி கதறி அழுதார் புஷ்பலதா. பின்னர் தந்தைக்கும் தெரிவிக்க விஷயம் காவல்துறையிடம் சென்றது. புகாரை ஏற்றுக்கொண்ட சேலையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அருகில் இருந்த சிசிடிவி மற்றும் அங்கே நடமாட்டம் இருந்த புதிய செல்போன் எண்களை டிராக் செய்தனர்.

2வது கணவருடன் சேர்ந்து கொள்ளை
இதுகுறித்து காவல்துறையினர் ரவி தெரிவித்தபோது, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக நகை, பணம் சேமித்து வைத்திருப்பதாக வேங்கைவாசலில் வசிக்கும் உறவினரிடம் தெரிவித்திருந்தாக கூறினார். எனவே அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து வேங்கைவாசலில் வசித்து வந்த சுமதி மற்றும் அவரது 2வது கணவர் ராகேவந்திரன் ஆகியோரை பிடித்து போலீசார் தங்களுடைய பாணியில் விசாரிக்க கொள்ளை சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications