வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறது - இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் இது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசாவை நோக்கி நகரக்கூடும் பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் இது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசாவை நோக்கி நகரக்கூடும் பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே அரபிக்கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனவும் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை டிஜி மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், தற்போது அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகுதான் அமைப்பின் திசை மற்றும் தீவிரத்தை அறிய முடியும். எவ்வாறாயினும், டிசம்பர் 3 ஆம் தேதி இரவு முதல் வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications