திருவள்ளூர் மாணவி கெளசல்யா மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையில் பகீர் தகவல்!
சென்னை: பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் கெளசல்யா என்ற இளம்பெண் உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதற்கு கௌசல்யா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கௌசல்யா என்ற இளம்பெண் மரணமடைந்தார். பொன்னேரியில் 2 ஆம் ஆண்டு பி.எட்., படித்து வரும் கௌசல்யாவை (20), கொத்தனார் வேலை செய்து வரும் அவரது அத்தை மகன் ராஜேஷ் (30) திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே நேற்று வீட்டில் கீழே விழுந்ததில் கெளசல்யாவுக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்து விட்டதாக தனியார் மருத்துவமனை உறுதி செய்ததாக கௌசல்யா வீட்டாரிடம் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கௌசல்யாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கௌசல்யாவின் தலை, முகத்தில் காயம் இருந்ததால் தமது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கௌசல்யாவின் கணவர் ராஹேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கௌசல்யாவின் கணவர் ராஜேஷ், அவரது காதலி தீபிகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதற்கு கௌசல்யா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications