மலை மேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது.. திருப்பரங்குன்றம் வழக்கில் வக்பு வாரியம் வாதம்
சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சென்னை உயர் நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இன்றும் விசாரணை தொடங்கிய நிலையில், வக்பு வாரியம் தரப்பில் முதலில் வாதம் வைக்கப்பட்டன. அப்போது, "1920 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலை மேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம். மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோயில் மரபு அல்ல என்பது 1862-லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நாங்கள் அறிய விரும்புகிறோம் என்று கூறினர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு
கோயில் நிர்வாகம் தரப்பில் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 12-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, "நீதிபதி தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த தூணானது தீபத்தூண் அல்ல. எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதாடினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி நேற்று விசாரணைக்கு வந்த போது காரசார வாதங்கள் நடைபெற்றன. மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நடைபெற்ற விசாரணையில், கோயில் தேவஸ்தானம் சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையில் பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
சமணர்கள் எழுப்பிய தூண்
கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்றும்படி தனிநபர் கோருவது ஏற்புடையதல்ல. இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலை மீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பசுமலை, கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், அரிட்டாப்பட்டி, யானைமலை ஆகிய குன்றுகளின் மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சமணர்கள் வசித்து உள்ளனர்.
இரவு நேரங்களில் சமணர்கள் குன்றுகளின் உச்சியில் அமர்ந்து ஆலோசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களின் வசதிக்காக கல் தூண் அமைத்து அதில் விளக்கு ஏற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். எனவே திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என தற்போது கூறப்படும் அந்த தூண், சமணர்கள் எழுப்பிய தூண்தான் என்று வாதிடப்பட்டது.
இன்று விசாரணை தொடங்கியது
சிக்கந்தர் தரப்பில் வைத்த வாதத்தில், தீபத்தூண் இருக்கும் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்புதான் அங்கு தீபம் ஏற்றுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நேற்று காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி அந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.
1862-லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் முபின் ஆஜராகி வாதம் முன்வைத்தார். அவர் வைத்த வாதத்தில், "1920 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலை மேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம். மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோயில் மரபு அல்ல என்பது 1862-லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லித்தோப்பு முதல் மலை உச்சி வரை படிக்கட்டு உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920 உத்தரவுபடி தர்காவும் அதற்கு அருகில் உள்ள நிலங்களும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது" 5என்று வாதிட்டார் தொடர்ந்து காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications