Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் மீண்டும் தனி ஆவர்த்தனம்- ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் திடீர் சந்திப்பு- பரபர சந்திப்பின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதுதான் அதிமுகவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென நேற்று சந்தித்தார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். எடப்பாடி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லாமல், ஜே.சி.டி.பிரபாகரனை மட்டும அழைத்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் ஓபிஎஸ். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் இதில் சில பல அரசியல் காரணங்கள் இருப்பதாக ஓபிஎஸ் வட்டாரங்களிலிருந்தே தகவல்கள் கசிகின்றன.

சட்டம்- ஒழுங்கு பிரச்சனை

சட்டம்- ஒழுங்கு பிரச்சனை

இந்த சந்திப்பில் என்னதான் நடந்தது என ஓபிஎஸ் தரப்பில் நாம் கேட்ட போது, 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. இந்த பிரச்சனைகளில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என பொத்தாம் பொதுவாக ஒரு கோரிக்கையை வைத்தார் ஓபிஎஸ். பின்னர் அதிமுக ஆட்சியை கரப்ஷன், கமிசன், கலெக்‌ஷன் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், தற்போது அவரது தலைமையிலான திமுக ஆட்சியில் அதே விசயங்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது என சொல்லியிருக்கிறார். மேலும், எந்தெந்த துறைகளில் எவ்வளவு கமிஷன் பெறப்படுகிறது என்பதையும், யார் மூலமாக இதற்கான தொகை கைமாறுகிறது என்பதையும் புள்ளிவிபரங்களோடு தெரிவித்ததுடன் அது தொடர்பாக அவர் தயாரித்திருந்த ஒரு ஃபைலையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்தாராம் ஓபிஎஸ்.

சசிகலா விவகாரம்

சசிகலா விவகாரம்

அதன்பிறகு, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் சிலரும் தான் அதற்கு தடையாக இருக்கிறார்கள். அதனால், டெல்லியிலிருந்து எடப்பாடிக்கு ஸ்ட்ரிக்ட்டாக சொல்லப்பட்டால்தான் அது நடக்கும். வலிமையான ஒன்றுபட்ட அதிமுகவுடன் பாஜக கூட்டணி இருந்தால் தான் திமுகவின் அரசியல் வலிமையை தடுக்க முடியும் என்றும் ஓபிஎஸ் சொந்த கட்சி புராணம் பாடினாராம்.

திமுகவுக்கு எதிராக

திமுகவுக்கு எதிராக

ஆட்சி அதிகாரம் ரீதியாக திமுக வலிமையடைந்தால் பாஜகவின் அரசியல் ரீதியிலான எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிறைவேறாது. அதனால் இந்த விசயத்தில் கவனம் செலுத்தினால் நல்லது என சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்.

எடப்பாடி கோஷ்டி அதிருப்தி

எடப்பாடி கோஷ்டி அதிருப்தி

இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பு தன்னிச்சையாக ஆளுநர் என்.ஆர். ரவியை சந்தித்தது குறித்து எடப்பாடி தரப்பு குமுறலை காட்டி வருகிறது. அதெப்படி நம்மை விட்டு விட்டு தனியே போய் ஓபிஎஸ் சந்திக்கலாம்.. ஆளுநரிடன் ஆர்.என்.ரவி என்ன என்ன ஓபிஎஸ் போட்டு கொடுத்தாரோ என திகிலுடன் இருக்கின்றனராம் எடப்பாடி தரப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+