’கண்ணுல பயத்த பார்த்துட்டேன்’ குஷியான ஓபிஎஸ்..! இனிதான் என்ன பத்தி தெரியும்? ‘லோக்கல்’ கை மூலம் சவால்!
சென்னை : சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்த்தால் மேலும் பலர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவ வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சற்றே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கலக்கத்தில் இருப்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருக்கிறார்
தற்போதைய நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் பழனிசாமிக்கு 99% மாவட்ட தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பழனிசாமிக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவில் குழப்பம்
இதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என விவாதம் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்எல்ஏ, இரட்டை தலைமைக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவரது சொந்த மாவட்டமான தஞ்சை மாவட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழி நடத்த முன்வர வேண்டும் என மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொண்டர்கள் ஆதரவு
இதற்குப் பின்னணி குறித்து ஆராய்ந்த போதுதான் பல ருசிகர தகவல்கள் வெளிவந்தன. தென் மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளையும் தொண்டர்கள் பலரையும் சொந்த செலவில் சென்னை வரவழைத்து தங்க வைத்துள்ள ஓபிஎஸ் தரப்பு அவரது வீட்டு முன் கட்சி அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கானோரை குவித்துள்ளனர். இதன் மூலம் தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருகின்றனர்.

இபிஎஸ் தரப்பு திட்டம்
இந்நிலையில்தான் தஞ்சையில் வைத்தியலிங்கம், தேனியில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை கண்டறிந்து அவர்கள் மூலம் போஸ்டர் ஒட்டினால் சொந்த ஊரிலேயே நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கலாம் என இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது அதன் காரணமாகவே இன்றும் பல இடங்களில் போஸ்டர்கள் உள்ளதாக கூறுகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். 'உள்ளூர் பிரமுகர்கள்' தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான்.

ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சி
இதனிடையே சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்த்தால் மேலும் பலர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவ வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சற்றே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளிடம் தனது கவலையை அவர் கூறியுள்ளார். அவருடன் நீண்ட காலமாக பயணிக்கும் "மணியான" நிர்வாகிகள், எதற்கும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என உறுதி அளித்தனர். இதனால் அவர் சற்றே நிம்மதி அடைந்து உள்ளார்.
Recommended Video

கசியும் தகவல்கள்
ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து தங்கள் முகாமுக்கு வந்து உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்புக்கு சாயலாம் என்பதனையும் மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கலக்கத்தில் இருப்பதை உணர்ந்த ஓ பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருக்கிறார். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்யும் வகையில் சசிகலாவை சந்திக்கப்போவதாக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
-
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications