வருவாங்களா..மாட்டாங்களா? ஆடி போய் ஆவணி வரட்டும்! ஓகே சொன்ன சசிகலா? காத்திருக்கும் ‘தேனி’ ர.ர.க்கள்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்ததும் சசிகலாவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.

ஓபிஎஸ் நெருக்கடி
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

நீதிம்ன்ற தீர்ப்பு
தற்போது நீதிமன்ற விவகாரங்களில் கடும் வாதங்களை ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் முன்வைத்து நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது தீர்ப்பு என்னவாக இருக்கும் என இரு தரப்பினருமே ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சசிகலாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இபிஎஸ் உறுதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக காரணம் எனக்கு கடுமையாக குற்றம் சாட்டியதோடு 2024 ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்று சேர்த்து எழுதலை சந்திப்போம் எனவும் அப்போது அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்தார். தற்போதுள்ள சூழலில் அதிமுகவை கைப்பற்றுவதில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி என்ன வந்தாலும் பதவியை விட்டு தரக் கூடாது என உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டி பதவியை கைப்பற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார்.
Recommended Video

விரைவில் சந்திப்பு
இப்படி இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் தரப்பு எப்போது சந்திக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் ஆடி மாதம் முடிந்து அதாவது இன்னும் சில நாட்களில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு இருக்கும் எனக் கூறுகின்றனர் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள். அதே நேரத்தில் இந்த சந்திப்பு எங்கு நடக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எப்படி இருந்தாலும் ஓபிஎஸ் சசிகலா இணைவது உறுதி எனவும் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்கின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்.
-
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications