மாற்றமில்லை.. 178 வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்.. வாகன ஓட்டிகள் நிம்மதி
சென்னை: தமிழகத்தில் இன்று 178வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விவை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்வு
இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

100யை கடந்து விற்பனை
அதாவது தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதையடுத்து ஓரளவு எரிபொருட்களின் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை ரூ.100யை கடந்து விற்பனையாகிறது.

மாற்றம் இல்லை
கடந்த 2 மாதமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று (நவம்பர் 15) தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையானது. சென்னையிலும் இதே விலை நீடிக்கிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து மாற்றமின்றி 178வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

வாகன ஓட்டிகள் நிம்மதி
தற்போது பால் உள்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை என்பது அதிர்ஷ்டவசமாக உயரவில்லை. தொடர்ந்து 178 வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். ஆயினும் கூட தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications