திமுகவுக்கு 35.8% அதிமுகவுக்கு 33.8% ஆதரவு.. கிங் மேக்கராகும் விஜய்! நியூஸ்18 வெளியிட்ட கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக நியூஸ் 18 நிறுவனம் தரப்பில் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திமுகவுக்கு 35.8 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 33.8 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகவும், விஜய்யின் தவெகவுக்கு 19.2 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் சூடு பிடித்துவிட்டது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட சூழலில், திமுக கூட்டணியும் இணக்கமாக உள்ளது. அதேபோல் விஜய்யின் தவெகவுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் தவெகவுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், மீண்டும் உற்சாகத்துடன் அக்கட்சியினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.

கருத்துக்கணிப்பு
மறுமுனையில் சீமான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இந்த மாதத்தில் திருச்சியில் நடக்கும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி நிலவும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூஸ்18 நிறுவனம் தரப்பில் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் வாக்கு சதவிகிதம் என்ன?
அதன்படி சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 35.8 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணி 33.8 சதவிகித வாக்குகளையும், விஜய்யின் தவெக 19.2 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6.5 சதவிகித வாக்குகளையும், கணிக்க முடியாத வாக்குகளாக 4.7 சதவிகிதமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
அதேபோல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, ஸ்டாலினுக்கு ஆதரவாக 33.3 சதவிகிதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு 29.8 சதவிகிதம் பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் முதல்வராக வேண்டும் என்று 23.2 சதவிகிதம் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 8.5 சதவிகிதம் பேரும், கணிக்க முடியாமல் 5.2 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங் மேக்கர் விஜய்
இதனால் விஜய் சுமார் 20 சதவிகித வாக்குகளை பெறுவது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்னும் தொடங்கப்படாத சூழலில், கருத்துக்கணிப்புகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இன்னும் தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிமுகம், பிரச்சாரம் ஆகியவற்றில் யார் முந்துகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள்












Click it and Unblock the Notifications