"ஒதுங்கி கொள்வார்கள்" ஓபிஎஸ், சசிகலா தனியாக செல்ல மாட்டார்கள்.. நம்பிக்கையாக சொன்ன டிடிவி தினகரன்!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதகம் வராத அளவிற்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் நடந்து கொள்வார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தனிப் பாதையில் செல்ல மாட்டார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் சூசகமாக கூறியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் தவெக பக்கம் டிடிவி தினகரன் செல்வார் என்று கருதப்பட்ட சூழலில், திடீரென யூடர்ன் போட்டு மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டார். செப்டம்பர் முதல் வாரத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய போதே, அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் கூட்டணியில் இணைந்ததாக கூறியுள்ளார்.

என்டிஏவில் டிடிவி தினகரன்
டிடிவி தினகரனின் இந்த செயல் தவெக மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன்பின் ஓபிஎஸ் தரப்பும் அதிமுகவுடன் இணைய தயாரான போது, எடப்பாடி பழனிசாமி கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று பதிலடி கொடுத்தார். இதன்பின் தேனியில் இருந்த ஏராளமான ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகினர்.
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே திமுக தரப்பில் ஓபிஎஸ் உடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயக்கம் காட்டி வருகிறார். அதேபோல் புதியக் கட்சியான விஜய்யுடன் கைகோர்க்கவும் ஓபிஎஸ் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
சசிகலாவின் வியூகம்
இதனால் ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் என்டிஏ கூட்டணி அல்லாமல் ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சசிகலாவும் இந்த தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்கப் போவதாக கூறி இருக்கிறார். தனிக் கட்சி தொடங்குவதும் குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
டிடிவி தினகரன் பேட்டி
இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதகம் ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்வார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள். அதனால் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களாக ஒதுங்கி கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆதரவை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications