பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?
சென்னை: கொங்கு மண்டலத்தின் மையப்புள்ளியான நாமக்கல் மாவட்ட அரசியல் களம், இதுவரை பார்த்திராத ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட்டை சந்தித்து கொண்டிருக்கிறது.. வழக்கமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மட்டுமே நடந்து வந்த அதிகாரப் போட்டியானது, இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு மூன்றாவது சக்தியின் வருகையால் தலைகீழாக மாறியிருக்கிறது.. அந்த 3வது சக்தி வேறு யாருமல்ல.. தவெக விஜய்தான்...!!
திமுகவின் கோட்டை என நம்பப்படும் இடங்களில் எல்லாம் தவெக தன்னுடைய வலையை விரித்து வருகிறதாம்.. இதுதான் ஆளுங்கட்சியின் நிம்மதியை மெல்ல மெல்ல குலைத்து வருகிறது..

நாமக்கல் மாவட்டம் திமுக
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜகவை மட்டும் சமாளித்தால் போதும் என்று கணக்கு போட்டிருந்த திமுகவிற்கு, இப்போது தவெக என்ற புதிய சவால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.. குறிப்பாக, அந்த மாவட்டத்தின் இளைஞர் பட்டாளம் காட்டும் ஆர்வம் திமுக மேலிடத்தை "ஓவர்டைம்" வேலை செய்யத் தூண்டியிருக்கிறது..
கொங்கு மண்டலம் என்பது எப்போதும் திமுகவிற்கு சவாலான ஒரு பகுதிதான்.. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிமுக நீண்டகாலமாக வேரூன்றி இருப்பதோடு, இப்போது பாஜகவும் அங்கு மெல்ல மெல்ல தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.. இந்த வரிசையில் இப்போது நாமக்கல் மாவட்டமும் இணைந்துள்ளது..
தமிழகம் முழுவதும் விஜய் எழுப்பும் அரசியல் முழக்கங்கள் எந்த அளவுக்கு எடுபடும் என்பது ஒருபுறம் இருந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அவரது பேச்சு அப்படியே பலிக்கும் என்கிறார்கள் அரசியல் விபரம் அறிந்தவர்கள்..
தவெக விஜய் 70 சதவீதம்
ஏனென்றால், காரணமே தெரியாமல் நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் விஜயை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்களாம்.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களில் 70 விழுக்காட்டிற்கு மேல் விஜய் ஆதரவு மனநிலையில் இருக்கிறார்களாம்.. அதனால் வரும் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் வெற்றிக்கு தவெக பெரிய சவலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன..
திமுகவின் 4 தொகுதிகள்
இவற்றில் கடந்த 2021 தேர்தலில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம் என 4 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும், பரமத்தி வேலூரில் சேகரும் வெற்றி பெற்றனர்.. இந்த முறையும் தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலேயே போட்டியிடுவார் என தெரிகிறது..
ஆனால் போன முறை திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரன் இந்த முறை பரமத்தி வேலூரை கேட்பதாக கூறப்படுகிறது..
பவன் கல்யாண் விரித்த வலை
நாமக்கல் மாவட்டத்தில் போன முறை 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவால் இந்த முறை அதே நான்கு தொகுதிகளைக் கூட தக்கவைக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் மாவட்டத்தின் எதார்த்த நிலை அறிந்தவர்கள்.. காரணம், நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் விஜய் ஆதரவு அலை தான் என்கிறார்கள்..
பெரிய அளவில் மெனக்கெடாமலேயே நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் விஜய் ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறது.. குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் மனநிலை திமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும், இளைஞர் இளம்பெண்கள் விஜய் பக்கம் தான் என்கிறார்கள்..
இந்நிலையில் பவன்கல்யாண் மூலம் பாஜக விஜய்க்கு தூண்டில் போட்டிருப்பதும் தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது.. ஒருவேளை விஜய் பாஜக பக்கம் தாவினால் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தி்ல் என்டிஏ கூட்டணி வாக்குகளை எளிதாக அறுவடை செய்துவிடும்..
திமுகவுக்கு ஆபத்து?
அல்லது விஜய் பாஜக பக்கம் செல்லாமல் இருந்தால், தவெகவால் அதிமுக வாக்குகளைப் பிரித்து, என்டிஏ கூட்டணியின் வெற்றியை டேமேஜ் செய்ய முடியும்.. அது நடந்தால் நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி எளிதாகும்.. எனவே, தமிழகம் முழுவதும் இல்லாவிட்டாலும் நாமக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் போட்டி திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் இருக்கும் என்கிறார்கள் கள நிலவரம் நன்கறிந்தவர்கள்.. இது திமுகவுக்கு ஒரு மெகா அலர்ட்டாகவே பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிபுணர்
-
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications