சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎஃப்ஐ-க்கு 5 ஆண்டுகள் தடை.. மதவெறி அமைப்புகளுக்கு மக்கள் ஆதரவளிக்க கூடாது.. பாலகிருஷ்ணன் கருத்து!

Google Oneindia Tamil News

சென்னை: பிஎஃப்ஐ போன்ற மதவெறி அமைப்புகளுக்கு மக்கள் ஆதரவளிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பிஎஃப் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த செப். 22-ம் தேதி, பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சோதனை செய்தது.

கேரளா, உத்தரப் பிரதேசம் என்று 10 மாநிலங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு.. இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு.. இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி

என்ஐஏ ரெய்டு

என்ஐஏ ரெய்டு

இதனைத்தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

247 பேர் கைது

247 பேர் கைது

தொடர்ந்து உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிஎஃப்ஐ-க்கு தடை

பிஎஃப்ஐ-க்கு தடை

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பிஎஃப்ஐ நடவடிக்கையில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. கேரளாவில் எங்கள் நிர்வாகிகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதவெறி அமைப்புகளை பெரும்பான்மை, சிறுபான்மை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதனை கருத்து ரீதியாக சந்திக்க வேண்டும், அரசியல் ரீதியாக சந்திக்க கூடாது. அதேபோல் பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்வதால் தீர்வு கிடைக்காது என்று தெரிவித்தார்.

English summary
Marxist Communist Party Tamilnadu State Secretary K. Balakrishnan said that people should not support sectarian organizations like PFI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X