பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல்...எட்டாவது முறையாக சிறை விடுப்பு நீட்டிப்பு - விடுதலை எப்போது
பேரறிவாளனின் சிறை விடுப்பு, மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை: பேரறிவாளனின் சிறை விடுப்பு, மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், சிறைவிடுப்பு எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளததாக கூறப்பட்டது.

பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு மே 18 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு கடந்த ஆண்டு மே 28 ஆம் தேதி 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி வேலூர் விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேரறிவாளன் தொடர் சிகிச்சையில் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 24ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், சிறைவிடுப்பு எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications