MEMES: கரண்ட் வருது.. போகுது.. ரிப்பீட்டு! முடியல தலைவரே! புலம்பிய நெட்டிசன்கள்.. அதிரிபுதிரி மீம்ஸ்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று செய்யப்பட்ட மின்தடையை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இணையம் முழுக்க மின் தடை மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு போன மின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் வந்தது. சில மாவட்டங்களில் 10 மணிக்கு போன மின்சாரம் 12 மணிக்குத்தான் வந்தது.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கொடுத்த விளக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதுதான் மின்தடைக்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

இன்வெர்ட்டர்
மின்வெட்டை தொடர்ந்து மீண்டும் இன்வெர்ட்டர் காமெடிகள் அதிகரித்துவிட்டன. இன்வெர்ட்டர் வாங்க வேண்டும் என்று பலர் காமெடி செய்து வருகின்றனர். இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்கள் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள் என்று பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மின்வெட்டு
மின் வெட்டு சமயத்தில் சில மாவட்டங்களில் மின்சாரம் 1 மணி நேரம் கட் செய்யப்பட்டு பின்னர் 2 நிமிடம் மின்சாரம் வந்து, பின்னர் மீண்டும் 1 மணி நேரம் கட் செய்யப்பட்டு இருக்கிறது. இதை வைத்து பலரும் காமெடி செய்து வருகின்றனர். மாநாடு படத்தில் வரும் தலைவரே.. வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு என்பதை வைத்து மீம் போட்டு வருகின்றனர்.

அதிர்ச்சி
திடீரென மின்சாரம் இரண்டு - மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் தமிழ்நாடு மின்துறையின் ஹெல்ப் லைனை அழைத்தும் கூட இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லை.
கோடை காலத்தில், இரவில் வியர்வை சொட்ட சொட்ட மக்கள் பலர் மொட்டை மாடிகளில் நிற்கும் நிலை ஏற்பட்டது. நேற்று மின்வெட்டை சரி செய்ய 2-3 மணி நேரம் ஆனதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

மின்வெட்டு பண்ணுங்க
மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மத்திய மின் தொகுப்பில் இருந்து வர வேண்டிய மின்சாரம் வராமல் போய் உள்ளது. ஆனால் சில நகரங்களில் மட்டுமே நேற்று மின்தடை ஏற்பட்டது. மதுரை உள்ளிட்ட சில மாநகரங்களில் மின்தடை ஏற்படவில்லை. இதை வைத்தும் சிலர் மீம் போட்டனர்.

தூக்கம் போச்சு
நேற்று சரியாக தூங்கும் நேரத்தில் மின்சாரம் போனதால் மக்கள் அவதிப்பட்டனர். பலர் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இன்வெர்ட்டர் இருக்கும் வீடுகளில் பிரச்சனை இல்லை. ஆனால் இல்லாத வீடுகளில் மக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். இது சீரியசான விஷயம் என்றாலும் இதையும் வைத்து பலர் காமெடி செய்து கொண்டு இருந்தனர்.

எல்லா ஏரியா
நேற்று மின்சாரம் தடையான பின் பலர் சமூக வலைத்தளங்களில் அதை பற்றி விவாதம் செய்தனர். எங்க ஊரில் கரண்ட் இல்லை என்று வரிசையாக ஒவ்வொருவராக போட தொடங்கினர். அப்போதுதான் பல மாவட்டங்களில் மின்சாரம் தடையானது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வந்தனர்.

மின்தடை
நேற்று மின் தடை சரியாக இரவில் தூங்கும் நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதனால்தான் மின்தடை நேற்று ஏற்பட்டுள்ளது. இதை வைத்தும் பலர் ஜாலியாக மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications