Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2026க்கு செம பிளான்.. இப்போ சொன்னா காப்பி அடிச்சுடுவாங்க.. அடுத்து பாமக ஆட்சிதான்!" அன்புமணி பளீச்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பாமக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அவினாசி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகுரும்ப பாளையம் பகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூகம் சார்பில் இந்திரன் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்!.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இதில் பாமகவின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்து இப்போது வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் இம்மானுவேல் சேகரனார் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கட்சி தொடங்கும் முன்பாகவே தீர்மானம் நிறைவேற்றியவர் ராமதாஸ்" என்றார்.

 பிரித்தாளும் சூழ்ச்சி

பிரித்தாளும் சூழ்ச்சி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதி கண்ணோட்டம் அல்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக அனைத்து அமைப்புகளும் ஒன்றினையும் பட்சத்தில் வளர்ச்சி உருவாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக வேண்டும். தேர்தல் அரசியலுக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்காக அனைவரின் உழைப்பும் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் அரசியல் காரணங்களுக்காகச் சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

 பாமக

பாமக

ஆனால் பாமக அனைவரின் ஒன்றிணைப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மட்டுமே சமூக வளர்ச்சி அடையமுடியும் என நம்புகிறோம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலனுக்காக ஆக்க பூர்வ எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார். திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி சென்ற அன்புமணி ராமதாஸ், செல்லும் வழியில் காளியப்பனூரில் இருக்கும் பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத் இல்லத்திற்குச் சென்றார்.

 காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையம்

அங்கு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா ஆலோசனை நடத்த உள்ளதால் தமிழ்நாடு அரசு இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும். இந்த கூட்டம் முழுக்க முழுக்க தமிழர்களின் நலனுக்கு எதிரான ஒன்று. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையர் ஒருதலை பட்சமாகச் செயல்படுகிறார்.

 எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

ஒரே நாடு-ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். இருப்பினும், இது சாத்தியமே இல்லாத திட்டங்களில் ஒன்றாகும். இந்திய அரசியல் சட்டத்தில் இது போல ஒன்றும் இல்லை. பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் பாமக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது. அதேநேரம் நாங்கள் எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரி கட்சிகள் இல்லை. காவிரியில் மணல் எடுப்பதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதை அரசு செயல்படுத்தினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

Recommended Video

    அதற்காகத்தான்’ பாமக 2.0! -அன்புமணி ராமதாஸ் போட்டி
     தேர்தல் வியூகம்

    தேர்தல் வியூகம்

    காவிரி ஆற்றில் முன்பு 48 குவாரிகள் செயல்பட்டு வந்தது. அதை நீதிமன்றம் சென்று மூடியதே நாங்கள் தான். இப்போது அங்கு 4 குவாரிகள் மட்டுமே செயல்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தல் வியூகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. இப்போதே நாங்கள் அதைச் சொன்னால் மற்ற கட்சிகள் காப்பி அடித்து விடுவார்கள். பாமக 2.0 காந்தி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+