Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொள்கிறது - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார், நகர்ப்புற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை என்றும் நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் ரொட்டிகார வீதியிலுள்ள 20 வது வாக்கு சாவடி மையத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் தனது ஜனநாயக குடியுரிமையான வாக்கினை தைலாபுரத்திலிருந்து காரில் வந்து செலுத்தினர்.

 PMK Founder Dr. Ramadoss Casts his Vote in TN Local Body Polls

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானது என்றும் மக்களே ஆட்சி செய்வதற்காக ராஜீவ் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவில்லை அங்கு நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக குற்றஞ்சாட்டிய அவர் வறுமை ஒழிப்பு, சுகாதாரம் , சாலை அமைத்தல் நடைபெறும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயாட்சி நடைபெற வேண்டும் என்றார்.

ஆனால் சுயாட்சி நடைமுறையில் இல்லை என்றும் ராஜீவ் காந்தி நினைத்தது நிறைவேறவில்லை என்றும் கூறினார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரத்தினை அளிக்க வேண்டும் எனவும் உள்ளாட்சியில் உள்ள பிரதிநிதிகளை எளிதில் பார்க்க முடியும் என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் முக்கியமானது என்பதால் உள்ளாட்சி தேர்தலில் 18 வகையான பணிகள் நடைபெறும் என்றும் கூறினார்.

நகர்ப்புற தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+