காமராஜருக்கு நிகராக ஸ்டாலின்! எனக்கு காரியம் நடக்கனும்! பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை!
சென்னை: பெருந்தலைவர் காமராஜரை போன்று முதலமைச்சர் ஸ்டாலினை நினைப்பதாக கூறி சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பாமக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சட்டசபையை கடந்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
திமுக -பாமக இடையே எதிர் எதிர் அரசியல் நடந்து வரும் சூழலில், பாமக எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக முதல்வரை இந்தளவுக்கு புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாமக எம்.எல்.ஏ.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில், தோனிமடவு திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கோரி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சி.எல்.ஏ. அறிக்கையின் படியும், வனத்துறைக்குள் நிலம் வருவதாலும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துவிட்டார். இருப்பினும் அவரை விடாமல் அந்த திட்டத்தை எப்பாடுபட்டேனும் தனது தொகுதிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்தி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேசினார்.

காமராஜர் போன்று
ஒரு கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை போன்று முதலமைச்சர் ஸ்டாலினை நினைப்பதாகவும் இதனால் முதலமைச்சரும், மூத்த அமைச்சரான துரைமுருகனும் தோனிமடவு திட்டத்தை மேட்டூர் தொகுதிக்கு வழங்க வேண்டும் எனக் கோரினார். அப்போது அவருக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த சக உறுப்பினர்கள் பாமக எம்.எல்.ஏ. சதாசிவத்தை நோக்கி ஏதோ கூறினார்கள். அப்போது பேசிய அவர், மன்னிக்கனும், நான் புகழ்வதாக எண்ண வேண்டாம். உண்மையிலேயே சொல்கிறேன், எனக்கு காரியம் நடக்கனும் என மனதில் இருந்ததை ஒளிவுமறைவின்றி தெரிவித்தார்.

காரியம் நடக்கனும்
எனக்கு காரியம் நடக்கனும் என பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனிடையே இதற்கு மீண்டும் இரண்டாவது முறையாக பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தொகுதி மீது கொண்ட பற்று காரணமாக உறுப்பினர் பேசுவது தனக்கு புரிவதாகவும் தோனிமடவு திட்டத்தின் மீது அவர் காட்டும் முனைப்பை தாம் அறிவதாகவும் கூறினார். முடியாது என பொத்தாம்பொதுவாக கூறாமல், தன்னால் இயன்ற வரை இது குறித்து முயற்சிக்கிறேன் என்பதை மட்டும் உறுதியாக அளித்தார்.

எதிர் எதிர் அரசியல்
திமுக -பாமக இடையே எதிர் எதிர் அரசியல் நடந்து வரும் சூழலில், பாமக எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக முதல்வரை இந்தளவுக்கு புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பாமக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சட்டசபையை கடந்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications