பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா?
சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பரிசோதனை முயற்சிக்கு தயாராகி வருகிறது. டெல்லி மேலிடம் முன்னெடுத்துள்ள பார்ட்னர்ஷிப் ஆட்சி முறை என்ற புதிய அஸ்திரம், கோட்டை நோக்கிய பயணத்தில் ஒரு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்க்கு, பாஜக கொடுத்துள்ளதாக கூறப்படும் அந்த 2.5 ஆண்டுகள் முதலமைச்சர் ஆஃபர், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு துருவ அரசியலையும் ஒருசேர அதிரவைத்துள்ளது. அதை பற்றின ஒரு பிரத்யேக செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக, 2026 தேர்தலை ஒரு வாழ்வா-சாவா போராட்டமாகவே பார்க்கிறது. அதிமுகவின் பலத்தையும், விஜய்யின் இளைய தலைமுறை செல்வாக்கையும் ஒன்றிணைத்தால் மட்டுமே திமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியும் என்பது அமித்ஷாவின் கணக்காக உள்ளது.

தவெக விஜய்
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்பது ஒரு புதிய கட்சிக்கு இமாலய சவால். களப்பணி, தேர்தல் செலவுகள் மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களை கடந்து வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்துள்ள விஜய் தரப்பிற்கு, பாஜகவின் இந்த கூட்டு ஆட்சி முறை ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாகத் தெரிகிறது.
பாஜகவின் இந்த திட்டத்தின்படி, தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் ஒருவருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் இன்னொருவருக்கும் முதலமைச்சர் பதவி என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாஜக தந்த ஆஃபர்
இந்த ஆஃபர் விஜய்க்கு அதிகாரத்தை மிக எளிதாக பெற்றுத்தருவதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் தனது கட்சியை தமிழ்நாடு முழுவதும் வேரூன்றச் செய்ய ஒரு பொன்னான வாய்ப்பையும் வழங்கும். ஆனால், இதே வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது..
ஒருபுறம் பாஜகவின் பிடியில் இருந்து அதிமுகவை காக்க வேண்டிய நெருக்கடி, மறுபுறம் விஜய்யின் வரவால் ஏற்படும் வாக்கு வங்கிச் சரிவு என இபிஎஸ் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.
தமிழகத்தில் பல வருடங்களாகவே நிலவி வரும் ஒற்றை தலைமை முறைக்கு இந்த பார்ட்னர்ஷிப் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இது தேசிய கட்சிகள் திராவிட மண்ணில் ஆழமாக ஊடுருவப் போடும் ஒரு தந்திரமா என்ற விவாதம் இப்போதே சோஷியல் மீடியாவில் தொடங்கிவிட்டது.
விஜய் சிக்குவாரா
அமித்ஷா வீசியுள்ள இந்த வலைக்குள் விஜய் சிக்குவாரா அல்லது தனது தனித்துவத்தைப் பேணிக் காப்பாரா என்பதுதான் தமிழக அரசியலின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..
ஆனால், இங்கே நாம் ஒரு கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது.. இந்த பார்ட்னர்ஷிப் ஆட்சி முறை என்பது கொள்கை ரீதியான கூட்டணியாக இல்லாமல், வெறும் அதிகார பகிர்வுக்கான ஒப்பந்தமாக மட்டுமே பார்க்கப்படும் அபாயம் உள்ளது. இது ஒரு தற்காலிக தீர்வாகத் தெரிந்தாலும், நீண்டகால நோக்கில் ஒரு நிலையற்ற ஆட்சிக்கே வழிவகுக்கும்..
குறிப்பாக, 2 வெவ்வேறு துருவங்களாக இருக்கும் கட்சிகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, நிர்வாகச் சிக்கல்களும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.
திராவிட அரசியல்
அதுமட்டுமல்ல, திராவிட அரசியலில் முதலமைச்சர் என்ற பதவியை சுற்றியே ஒட்டுமொத்த அதிகாரமும் சுழலும் நிலையில், அதை 2 ஆக பிரிப்பது என்பது அக்கட்சிகளின் தனித்துவத்தைச் சிதைக்கும் முயற்சியாகவே அமையும்..
எடுத்த எடுப்பிலேயே இந்த தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகர் விஜய்.. இது அவருக்கு குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய உதவும் என்றாலும், மக்களிடையே தனது கொள்கை பிடிப்பை நிரூபிக்க வேண்டிய மிகப்பெரிய சவால் அவருக்கு காத்திருக்கிறது என்பதையும் அவர் மறந்துவிடக்கூடாது.. !!!
-நமது சிறப்பு நிருபர்
-
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications