எதிராக மாற காத்திருக்கும் "அப்ரூவர்கள்.." அதிர்ச்சியில் சசிகலா.. விஸ்வரூபம் எடுத்த விதிமீறல் விஷயம்!
சென்னை: பெங்களூரிலிருந்து சசிகலாவிற்கு வரும் தகவல்கள் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தரவில்லை. தீவிர யோசனையில் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூர் சிறையில் சசிகலா இருந்தபோது, அங்கு சொகுசாக இருப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கினார் சசிகலா. இதனை அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கண்டுப்பிடித்து அம்பலப்படுத்தினார்.
அதனை விசாரிப்பதற்காக வினாய்க்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது கர்நாடக அரசு. கமிட்டியும் தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.

ஆஜராக உத்தரவு
இந்த நிலையில், இந்த பிரச்சனையில் சசிகலா மற்றும் சிறைத்துறையை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது, சசிகலாவுக்கு மீண்டும் சிறை கிடைக்குமோ என்கிற விவாதத்தை உருவாக்கியது. இதன் விசாரணை அண்மையில் வந்தபோது, மார்ச் 11ம் தேதி சசிகலா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது கோர்ட்!

மன உளைச்சல்
இந்த வழக்கு தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் நெருக்கடியையும் தந்துகொண்டிருப்பதாக வீட்டிலிருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கும் சிறை அதிகாரிகள் சிலரை அப்ரூவராக மாற்றும் முயற்சியில் அரசு தரப்பு இருப்பதாக சசிகலாவுக்கு கிடைத்திருக்கும் தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.

சம்மன் வரவில்லை
இந்த நிலையில், 11ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அவருக்கு சம்மன் வந்து சேரவில்லை. இது குறித்தெல்லாம் தனது வழக்கறிஞர்களிடம் சசிகலா ஆலோசிக்க, "சம்மன் வந்ததும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு மனு தாக்கல் போட்டுடலாம் அம்மா. நீங்க கவலைப்படாதீங்க" என்று சொல்லியிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

சசிகலா யோசனை
இதற்கிடையே, இந்த வழக்கில் ஆஜராக வைக்க உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரை கொண்டு வரலாம்; இங்கிருக்கும் வக்கீல்களை தள்ளி வைக்கலாம் என்று சசிகலாவுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அவரது குடும்ப உறவுகள். என்ன நடக்கப்போகிறது என்பதை அவரது ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications