"புரட்சி".. அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்.. நேரம் பார்த்து களத்தில் குதித்த சசிகலா.. பரபர அறிவிப்பு!
சென்னை: அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவில் நேற்று மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்ட நிலையில் இறுக்கமான முகத்தோடு வெளியேறினார்.
நேற்று பொதுக்குழுவில் அதிமுகவின் தீர்மானக்குழு ஓபிஎஸ் ஒப்புதலோடு வழங்கிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன.

23 தீர்மானங்கள்
23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம். ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை கொண்டு வரும் பொதுக்குழுவே உண்மையான பொதுக்குழு என்று எடப்பாடி ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதோடு இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் என்றும் அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் நடந்த இந்த அத்தனை விஷயங்களையும் நேற்று சசிகலா டிவி மூலமும், அதிமுகவில் உள்ள சில ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கிறார்.

ஓபிஎஸ்
முக்கியமாக ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டு, அனுப்பப்பட்டதை சசிகலா டிவியில் பார்த்து இருக்கிறார். இந்த நிலையில்தான், அதிமுகவில் மோதல் நிலவி வருவதற்கு இடையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் புரட்சிப்பயணம் என்ற தலைப்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார்.

சத்துணவு திட்டம்
சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.
புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்துகிறார்.

தியாகராஜ நகர் வீடு
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுப்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் R.K.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.
Recommended Video

சின்னம்மா பயணம்
புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவியை தங்களது முன் மாதிரியாக ஏற்றுக்கொண்டு தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications