Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்னீருக்கு தெரியாமலா நடந்தது? கடுகடுத்த எடப்பாடி.. அதெல்லாம் பேச முடியாது.. கைவிட்ட "டெல்லி" டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலாவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாக இந்த கோரிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

சசிகலா தற்போது தென் மாவட்டங்களுக்கு ஆன்மீக அரசியல் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். திருச்செந்தூருக்கு பல்வேறு வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடத்துவதற்காக சசிகலா சென்று இருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில்தான் இந்த ஆன்மீக பயணத்தை சசிகலா மேற்கொண்டு இருக்கிறார்.

கடந்த 2ம் தேதிதான் சசிகலாவிற்கு ஆதரவாக தேனியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான பண்டை வீட்டில் அந்த பரபரப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம்

கூட்டம்

இந்த கூட்டமே ஓ பன்னீர்செல்வத்தின் தலைமையில்தான் நடத்தப்பட்டது. அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் இந்த கூட்டத்தில் நீண்ட நேரம் பேசினார். இதில் பேசிய சையது கான் கூட்டத்தின் தொடக்கத்திலேயே சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற சசிகலா, டிடிவி ஆதரவு தீர்மானம் ஓ பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது.

பண்ணை வீடு

பண்ணை வீடு

இந்த கூட்டம் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடந்தது. ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து சென்ற பின்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும், அதிமுகவினர் இடையே இந்த தீர்மானம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்தே சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ ராஜா பேட்டி அளித்தார். அதோடு வி.கே. சசிகலா திருச்செந்தூர் வந்திருந்த போது அங்கு ஓ. ராஜா சந்தித்து பேசினார். அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது பற்றி இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

பன்னீர் செல்வம்

பன்னீர் செல்வம்

இத்தனை விஷயங்கள் அடுத்தடுத்து நடந்த நிலையில், சசிகலா பற்றி தேனியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியாமலா நடந்து இருக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக கூறப்படுகிறது. அதாவது தேனியில் செயல் வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் ஓபிஎஸ் தம்பி ராஜாவும் சசிகலாவை சந்திக்கிறார்.

தூண்டி விடும்

தூண்டி விடும்

இதெல்லாம் ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமலா நடக்கும்.. நம்ப முடியலையே.. அவர் என்ன தூண்டி விட்டு ஆழம் பார்க்கிறாரா என்று எடப்பாடி தரப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே ஆர்பி உதயகுமாரும் கடந்த 3ம் தேதி தேனிக்கு விரைந்து சென்றார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்போ தனக்கும் அந்த தீர்மானத்திற்கு தொடர்பு இல்லை. நான் கூட்டத்தில் இருந்து வந்த பின்பே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் மறைமுக தேர்தல் பற்றி மட்டுமே பேசினேன் என்று விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

 டெல்லியை வைத்து நெருக்கடி

டெல்லியை வைத்து நெருக்கடி

ஓபிஎஸ் இப்படி விளக்கம் அளித்தாலும் உண்மையில் தேனியில் நடந்த விஷயங்களுக்கு பின்பாக ஓபிஎஸ்ஸின் முழு ஆதரவு இருப்பதாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இப்படி இருக்க இன்னொரு பக்கம், ஓபிஎஸ் இப்படி சசிகலா பக்கம் சாய்வதை தடுக்கும் விதமாக டெல்லி பாஜகவை வைத்து அவருக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி தரப்பு முயன்றதாக கூறப்படுகிறது. டெல்லி மூலம் சசிகலாவின் எழுச்சியையும், ஓபிஎஸ் கேமையும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று எடப்பாடி முயன்றதாக கூறப்படுகிறது.

முடியாது

முடியாது

இதனால் டெல்லி பாஜகவில் சிலரிடம் பேசி அழுத்தம் கொடுக்க முயன்ற போது.. டெல்லியில் யாரும் இதற்கு மத்தியசம் பேச தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி உடைந்ததால் அதிமுக இரட்டை தலைமை மீது டெல்லி கடுப்பில் இருக்கிறதாம். அதனால், நாங்கள்தான் கூட்டணியில் இல்லையே.. நாங்கள் ஏன் சமரசம் பேச வேண்டும். சசிகலா வருவதை நாங்கள் ஏன் தடுக்க வேண்டும் என்று டெல்லி தலைமை கழன்று கொண்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

    AIADMK-வுக்கு Sasikala அல்லது TTV தலைமை ஏற்க வேண்டும்-Ex MLA Arukutty | Oneindia Tamil
    இப்போது கூட்டணியில் இல்லை

    இப்போது கூட்டணியில் இல்லை


    அதிலும் சசிகலா வந்தால் கட்சி பலமாகும், இது நமக்குத்தான் நல்லது. அதிமுகவில் மீண்டும் கூட்டணி வைக்கலாம் என்று பாஜக நினைக்கிறதாம். இதனால் அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பவர்களை அடக்க முடியாமல் இபிஎஸ் தரப்பு கொஞ்சம் நிலைகுலைந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியின் ஆசி இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் சசிகலாவின் எழுச்சி புதிய உச்சம் பெறும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+