“நீ தளபதி இல்லை.. தலைவலி” - விஜய்யை விளாசி தள்ளிய சாட்டை துரைமுருகன்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தளபதி இல்லை. தலைவலி என்று சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், "தன்னை பார்க்க ரசிக்க வந்த 43 பேரை களத்தில் சாக விட்டு ஓடிப்போன கோழை எப்படி தலைவனாக முடியும். சினிமாவில் நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட. மோதி பாரு வீடு போய் சேர மாட்ட என்று பாட்டு பாடுவார். தனலட்சுமியை காப்பாற்ற கில்லி படத்தில் விஜய் ஓடுவார்.

யார் தளபதி
கரூர் சம்பவத்தில் தப்பித்து ஓடுவதற்காக அப்போதே பிராக்டீஸ் எடுத்துள்ளார். இதே 43 பேர் சாகும்போது எங்கள் அண்ணன் சீமான் மட்டும் களத்தில் இருந்திருந்தால், என் உயிரே போனாலும் மக்களை விட்டு போக மாட்டேன் என்று நின்றிருப்பார். அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.
அரசியலுக்காகவோ, என்னவோ ஆளுங்கட்சியின் தலைமை தொடங்கி செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோர் நின்றனர். எதிக்கட்சிகளும் களத்தில் நின்றனர். நாம் தமிழர் கட்சியில் சீமான், நான், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் சென்றோம். மக்களை பலிகொடுத்து ஓடி சென்றவனை தளபதி என்று புகழ்கிறார்கள். யார் தளபதி.
விஜய்க்கு 2 பேர் மீதுதான் பயம்
வேலுநாச்சியார் அல்லது மருது பாண்டியர்கள் யாரின் படைக்கு இவர் தளபதியாக இருந்தார். நீ எப்படி தளபதி ஆவாய். நீ தளபதி இல்லை. நீ தலைவலி. விஜய் மீது வன்மத்தோடு பேசுகிறார்கள் என்று புலம்புகிறார்கள். அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் திட்டம் என அறிவிக்கிறார். திருமணம் முடிந்து வரும் பெண்களுக்கு விஜய் ஒரு பவுன் நகை, காஞ்சிபுரம் பட்டு புடவை வழங்குவாராம்.
விஜய் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பயப்படுகிறாரா என்று தெரியவில்லை. அவர் சிபிஐ பார்த்து நடுங்குகிறாரா என்று கூட தெரியவில்லை. ஆனால் 2 பெயர்களை கேட்டுத்தான் விஜய் பயப்படுகிறார். ஒன்று சாட்டை, இன்னொன்று இடும்பாவனம் தான். இது எங்களுக்கு பெருமை. நாங்கள் விஜய்க்கு எதிரான அரசியலை முன் வைக்கவில்லை.
நாடாள முடியாது..
சினிமாவில் நடித்து நாடாள முடியும் என்று யாருமே வரக்கூடாது. உனக்கு விழுகிற அடியில் இனி ஒரு பையன் அரசியலைப் பற்றி நினைக்க கூடாது. நடிப்பதை நிறுத்தினால் நாடாள வாய்ப்பு கொடுப்பார்கள் என்கிற சிந்தனை இந்த தேர்தலுடன் ஒழிய வேண்டும்" என்றார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications