சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: எனக்கு போட்டியே இல்லை.. சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் மிகப்பெரிய தொகுதியும், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியுமான சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி-கந்தன் உடன் தேர்தல் பரபரப்புக்கு இடையே நாம் சந்தித்தோம்.

அப்போது அவரிடம் நாம் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்ப்போம்.

இந்த தொகுதிக்கு நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்?

Sholinganallur ADMK Candidate K.P.Kandhan Interview with one india

2011ல் மறுசீரமைப்புக்கு பின் உருவான தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு நான் எம்எல்ஏவாக பதவி ஏற்ற போது,சாலைகள் முறையாக இல்லை. தெருவிளக்குகள் இல்லை. குடிநீர் வசதிகள் முறையாக இல்லாமல் இருந்தது. ஆனால் நான் எம்எல்ஏவாக ஆன பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுக்களை கொடுத்து சாலைகள் வசதி ஏற்படுத்தினேன். அனைத்து பகுதியிலும் தெருவிளக்குகள் போட்டேன். நெமிலி குடிநீரை கொண்டு வந்து விநியோகம் செய்தேன். பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம். பார்க்குகள் அமைத்துள்ளோம். அம்மா உணவகங்கள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நீஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கைகளுடன் மருத்துவனை. கண்ணகி நகரில் 30 படுகையுடன் கூடிய மருத்துவனை, கட்ட முயற்சித்து வருகிறோம். என் எம்எஎல்ஏ நிதியில் இருந்து சமுதாய கூடங்கள், ரேஷன் கடைகள் கட்டிக்கொடுத்துளோம், ஜிம்கள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். சோழிங்கநல்லூரில் எம்எல்ஏ அலுவலகத்தை கட்டினோம் என்றார்.

இங்கு உங்களுக்கு உள்ள சவால்கள் உள்ளன.

இது மிகப்பெரிய தொகுதி. இங்கு குடிநீர்வசதி அனைவருக்கும் செய்து கொடுப்பது சவாலாக இருக்கும். சுங்கச்சவாடியை நீக்க வலியுறுத்கிறார்கள். இதேபோல் பாலங்கள் கட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்னுடைய உழைப்பு மூலம் இதை செய்துகாட்டுவேன் என்றார். நான் இங்கு மீண்டும் எம்எல்ஏ ஆனால் ராயப்பேட்டை போல் ஒரு அரசு மருத்துவனை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தாலுகா ஆபிஸ் கொண்டுவர முயற்சிப்பேன். சோழிங்கநல்லூர் ஜங்சனில் மேம்பாலம் போட வேண்டும் என்றார்.

உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?

எனக்கு முக்கிய போட்டியாளர்கள் யாருமில்லை. திமுக வேட்பாளர் ஐந்து வருடமாக மக்களை சந்திக்கவில்லை. எந்த பணியும் செய்யவில்லை. அதனால் மக்கள் வந்து, நான் எம்எல்ஏவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னை சந்தித்து மக்கள் மனுக்களை அளித்துள்ளார்கள். அதை வாங்கி வைத்துள்ளேன்.. கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். அரசு அறிவித்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

English summary
Sholinganallur ADMK Candidate K.P.Kandhan Interview with one india: he said I have no big competition from any one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X