சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மஞ்சள் கலர்.. 7ம் நம்பர்! இங்க தோனி.. அங்க ரொனால்டோ -செம ஒற்றுமை! சென்னை ரசிகர்களை கவருமா அல் நஸ்ர்?

Google Oneindia Tamil News

சென்னை: சவூதி அரேபியாவை சேர்ந்த பழமையான அல் நஸ்ர் என்ற கால்பந்து கிளப் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்து இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனிக்கும் இடையிலான சில ஒற்றுமைகளையும், ரொனால்டோ வருகையால் அல் நஸ்ர் அணிக்கு பயன் கிடைக்குமா? என்பதையும் பார்ப்போம்.

கத்தாரில் நடைபெற்ற பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் குறித்த பேச்சுக்கள் தற்போது ஓய்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும் கிளப் போட்டிகள் தொடர்பான பேச்சுக்கள் எழுந்து இருக்கின்றன.

பொதுவாகவே கால்பந்து வீரர்களை பொறுத்தவரை சொந்த நாட்டுக்காக ஆடும் போட்டிகளை கிளப் அணிகள் ஆடும் போட்டிகளே அதிகம். சிறிய நாட்டை சேர்ந்த வீரரும் கிளப் அணிகளில் விளையாடி உலகளவிலான ரசிகர்களை ஈர்த்துவிடுவார்கள்.

மறைந்தார் முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்.. 600 ஆண்டுகளில் முதல்முறையாக தானாக பதவியை துறந்தவர் மறைந்தார் முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்.. 600 ஆண்டுகளில் முதல்முறையாக தானாக பதவியை துறந்தவர்

கிளப் அணி

கிளப் அணி

அதேபோல் கிளப் அணிகளில் விளையாடுவதன் மூலமே வீரர்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக போர்ச்சுகல் அணி வீரர் ரொனால்டோ, தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைட்டேட் அணிக்காக விளையாடியதன் மூலமே உலகம் முழுவதும் சிறந்த கால்பந்து வீரர் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டார். போர்ச்சுகல் அணியின் வளர்ச்சிக்கும் அவருக்கு கிடைத்த புகழ் உதவியாக இருந்தது.

ஐரோப்பிய லீக் போட்டிகள்

ஐரோப்பிய லீக் போட்டிகள்

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான ஐஎஸ்எல் கால்பந்து தொடரை போன்றே கால்பந்தில் சிறந்த விளங்கும் நாடுகளிலும் லீக் சுற்று போட்டிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ரொனால்டோ முதன் முதலில் போர்ச்சுகலை சேர்ந்த ஸ்போர்டிங் சிபி கிளப் அணிக்காக விளையாடினார்.

மான்செஸ்டரில் மாஸ்டர்

மான்செஸ்டரில் மாஸ்டர்

அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு முதல் 2009 வரை பிரிட்டனின் புகழ்பெற்ற அணியான மான்செஸ்டர் யுனைடேடுக்காக இங்கிளிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி உலகளவில் அவர் புகழ்பெற்றார். அதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணியில் அவர் 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதுதான் ரொனால்டோவின் பொற்காலம் எனலாம். ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் 450 கோல்களை அடித்தார்.

அணி நிர்வாகத்துடன் மோதல்

அணி நிர்வாகத்துடன் மோதல்

இதற்கு அடுத்து இத்தாலியின் ஜுவண்டஸ் அணியில் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ 2021 வரை அந்த அணியில் விளையாடி 101 கோல்களை அடித்தார். கடந்த ஆண்டு அவர் மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டேட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்படவே கடும் விமர்சனங்களை முன்வைத்து அவர் வெளியேறினார்.

உலகக்கோப்பையில் அவமதிப்பு

உலகக்கோப்பையில் அவமதிப்பு

இதற்கிடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ, ரொனால்டோ மீதான தனிப்பட்ட பகையால் அவரை மைதானத்தில் இறங்கி விளையாட அனுமதிக்காமல் பெஞ்சிலேயே அமர வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காலிறுதியில் போர்ச்சுகல் தோல்வியடைந்து வெளியேறும்போது ரொனால்டோ கண்ணீர் விட்டது அனைவரையும் கவலையடைய செய்தது.

சவூதி அணியில் ரொனால்டோ

சவூதி அணியில் ரொனால்டோ

ரொனால்டோவின் கால்பந்து எதிர்காலம் முடிவுக்கு வந்தது என்று பேசப்பட்டு வந்த நிலையில்தான், ஐரோப்பாவில் இருந்து ஆசிய கிளப் அணிக்கு மாறி இருக்கிறார் ரொனால்டோ. ஆம் அல் நஸ்ர் எனப்படும் 65 ஆண்டுகள் பழமையான அணியில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மஞ்சள் நீல நிறத்தில் 7 ஆம் எண் அச்சிடப்பட்ட சீருடையுடன் அவர் நிற்கும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தோனியுடன் ஒற்றுமை

தோனியுடன் ஒற்றுமை

இது எங்கோ பார்த்ததை போல் உங்களுக்கு தெரிகிறதா? அட நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியும் இப்படிதான் இருக்கும். கேப்டன் தோனி மஞ்சள் நீல நிற சீருடையில் 7 எண் கொண்ட சீருடையை தானே அணிந்து இருப்பார். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட ரொனால்டோவும் இனி அல் நஸ்ர் அணிக்காக அதே நிறத்தில் அதே எண் கொண்ட சீருடையை அணிய இருக்கிறார். இதனால் சென்னை வீரர்களை அந்த அணி கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Some similarities between Cristiano Ronaldo and Chennai Super Kings team player Dhoni, who has signed a contract to play for Al Nassr, an ancient football club from Saudi Arabia, will Ronaldo's arrival benefit Al Nasr? Let's see also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X