சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சாட்டை சுழற்றப்படும்!" திமுக ஐடி விங்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள்! கலகத்தில் நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஐடி விங் மீதான விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஒன் இந்தியா செய்திக்குப் பதில் அளிக்கும் வகையில் திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இளம் தலைமுறையினரிடம் சென்றடைய சமூக வலைத்தளங்களே அதிக அளவில் பயன்படுகிறது.

பசிக்கு உணவு கேட்ட 5 வயது சிறுமி! வளர்ப்பு தாய் செய்த கொடூரம்! கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம் பசிக்கு உணவு கேட்ட 5 வயது சிறுமி! வளர்ப்பு தாய் செய்த கொடூரம்! கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

இதன் காரணமாகத் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அனைத்தும் தங்களுக்கு என பிரத்தியேக ஐடி விங்கை வைத்துள்ளன. இதன் மூலம் ஆன்லைன் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்,

 திமுக ஐடி விங்

திமுக ஐடி விங்

அதேநேரம் தமிழகத்தில் இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் ஐடி விங் பலமானதாக இல்லை என்ற விமர்சனமும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஐடி விங்கை சேராத திமுகவினர் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் திமுகவின் இருப்பு இருப்பதாக இணைய உபிகள் பொதுவாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு திமுகவின் ஐடி விங் மீது திமுக அனுதாபிகளே கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக மீதான பொய் பிரசாரங்களுக்கு ஐடி விங் உரியப் பதிலடியைக் கொடுக்க தவறுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதேபோல திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி எம்எல்ஏக்கள், எம்பிகள், நிர்வாகிகள் என அனைவரும் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகளை வைத்துள்ளனர். அதில் அவர்கள் தங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த போட்டோக்கள், வீடியோக்களை மட்டுமே பதிவிடுகிறார்கள். திமுக ஐ.டி விங் கையில் எடுக்கும் பிரசாரங்களைக் கூட அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வது இல்லை என்று கூறப்படுகிறது.

 ரீச் ஆகவில்லை

ரீச் ஆகவில்லை

நேற்றைய தினம் கூட திமுக ஐடி விங் சார்பில் அண்ணாமலை ஊழல் புகார் குறித்த ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, "கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வாங்குவதில் அரசுக்கு இழப்பு என்றார் அண்ணாமலை; அவர் கொண்டு வந்த ஆதாரங்களில் 'ஒன்றுமில்லை' என்பதைச் சம்பந்தப்பட்ட துறையினரே விளக்கி, அவர் காட்டிய ஆதாரங்கள், அத்தனையையும் நொறுக்கித் தள்ளினர்!" என்று ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த ட்வீட் பெரியளவில் ரீச் ஆகவில்லை.

 கேள்வி

கேள்வி

இது குறித்து தர்மபுரி எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில், "அனைத்து மாவட்டங்களிலும் திமுக ஐடி விங்கிற்கு உறுப்பினர்கள் உள்ளனர். அதனடிப்படையில் பலமான திமுக ஐடி விங் சார்பில் போடப்பட்டு ட்வீட்க்கு 6 மணி நேரத்தில் குறைந்தது 1 லட்சம் லைக்குகளை எட்ட வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக 240 லைக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இது சாட்டையைச் சுழற்ற வேண்டிய நேரம். ஐடி விங்கை மேம்படுத்த டிஆர்பி ராஜா செலுத்தும் கடின உழைப்பையும் பணத்தையும் நன்கு அறிவேன். ஆனால் முதலமைச்சரின் செய்திகளைக் கூட திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் ரீட்வீட் செய்யாமல் இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 ஒன் இந்தியா செய்தி

ஒன் இந்தியா செய்தி

இது குறித்து நமது ஒன்இந்தியா தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதைத் தர்மபுரி எம்பி செந்தில் குமாரும் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இதற்கிடையே இதற்குப் பதில் அளிக்கும் வகையில் திமுக ஐடி விங் செயலாளர் பதில்களை அளித்துள்ளார். "கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பி.டி.ஆர் அமைத்துத் தந்த அடித்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அதில் பலவற்றைப் பற்றி இங்கு விவாதிக்க முடியாது. ஐடி விங் பலம் 30 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 நீக்கப்படுவார்கள்

நீக்கப்படுவார்கள்

முறையாகச் செயல்படாதவர்கள் நீக்கப்படுவார்கள். இணையதளங்களில் பொய் பிரசாரங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் 100K லைக்குகள் குறித்துக் கேட்டீர்கள். ஆனால் அதைக் காட்டிலும் நாங்கள் 5 மடங்கு செய்துவிட்டோம் எனக் கூறுவதில் மகிழ்ச்சி! #HBDKalaignar99க்காக அரை மில்லியன் ட்வீட்களை பதிவிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

 சாட்டை சுழற்றப்படும்

சாட்டை சுழற்றப்படும்

திமுக ஐடி விங்கில் பல மாற்றங்கள் வரவுள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது திமுக ஐடி செயலாளர் டிஆர்பி ராஜாவே அது குறித்து வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார். விரைவில் ஐடி விங்கை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, சிறப்பாக செயல்படாத ஐடி விங் நிர்வாகிகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் தங்கள் இருப்பதை வலுப்படுத்த விரைவில் சாட்டையைச் சுழற்றத் தாயாராகிறது திமுக!

English summary
DMK IT wing might see new faces really soon, DMK TRB Raja about IT wing: (திமுக ஐடி விங் செயல்பாடுகளில் திமுக ஆதரவாளர்கள் கோபம்) DMK supporters are angry on DMK IT wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X