NDA கூட்டணியில் விஜய்? எஸ்பி வேலுமணி எடுக்கும் கடைசி கட்ட முயற்சி.. முக்கிய புள்ளி சொன்ன தகவல்
சென்னை: விஜய்யை என்டிஏ கூட்டணிக்குள் அழைத்து வர முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், ரஜினி விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்குப் பிறகு, நிலைமை மாறிவிட்டதாகவே தெரிகிறது. பாஜக தலைவர்களே விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையே கடைசிக் கட்ட முயற்சியாக அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி, விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வரக் கடைசிக்கட்ட முயற்சியை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சூழலில், ஒரு பக்கம் திமுகவும் மற்றொரு பக்கம் அதிமுகவும் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை பாஜக, பாமக, அமமுக என வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே இந்த கூட்டணிக்குள் விஜய்யைக் கூட்டி வர முயற்சிகள் நடந்தாக சொல்லப்பட்டது.

கூட்டணி கணக்கு
அதிகாரப்பூர்வமாக இதுபோல பேச்சுவார்த்தை நடப்பதை எந்தவொரு தரப்பும் உறுதி செய்யவில்லை என்றாலும் திரைமறைவில் இதற்கான காய்கள் நகர்த்தப்பட்டதாகவே கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடிக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விஜய்க்கு 80 தொகுதிகள் வரை கொடுக்கக் கூட பாஜக தரப்பில் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விஜய் என்டிஏ கூட்டணிக்குள் வந்தால் 80 இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி தருவதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், விஜய் முதல்வர் கனவில் இருக்கிறார். மேலும், பாஜகவை கொள்கை எதிரி எனச் சொல்லி வருகிறார். இந்த நேரத்தில் இரு விவகாரங்களிலும் சமரசம் செய்வது சரியாக இருக்காது என அவர் கருதுகிறார். இதனால் அவர் என்டிஏ கூட்டணிக்கு நோ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
ஆதவ் அர்ஜுனா கருத்து
இந்தச் சூழலில் தான் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்தது. அதாவது ரஜினிகாந்த் திமுக குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாலேயே அரசியலில் இருந்து விலகினார் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். ஆனால், திமுகவை எதிர்த்து நிற்பது விஜய்யின் மன வலிமையைக் காட்டுகிறது என்பது போலப் பேசியிருந்தார். அவரது கருத்துகளுக்கு அப்போதே ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், என்டிஏ தரப்பு மவுனமாகவே இருந்தது.
இதற்கிடையே நேற்றைய தினத்தில் இருந்து ஆதவ் கருத்துக்கு நேரடியாக என்டிஏ தலைவர்கள் எதிர்வினையாற்ற ஆரம்பித்துவிட்டனர். இதன் மூலம் என்டிஏ கூட்டணிக்குள் விஜய் வரமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அதேநேரம் இப்போதும் விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வரும் கடைசிக் கட்ட முயற்சியை வேலுமணி எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தவெகவுடன் அவர் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கேசி பழனிசாமி
இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் விஜய் இருக்கிறார்.. கட்சியைத் தக்கவைக்க வாக்கு சதவிகிதத்தைத் தாண்டி எம்எல்ஏக்கள் முக்கியம் என்பதால் விஜய் கூட்டணிக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவே கேசி பழனிசாமி கூறுகிறார். மேலும், இதுவரை அதிமுக உடன் கூட்டணி வைக்க முடியாது என்பதை தவெக எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பதையும் கேசி பழனிசாமி சுட்டிக்காட்டுகிறார்.
அதேநேரம் அதிமுக குறைந்தது 150 தொகுதிகளில் போட்டியிடும் என்பதால் விஜய் வந்தாலும் 45 இடங்கள் தான் கிடைக்கும் என்பதையும் அவர் புதிய தலைமுறை ஊடக விவாதத்தில் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் 45 இடங்களில் போட்டியிட்டால் எதிர்க்கட்சி தலைவராகவும் வாய்ப்பு விஜய்க்குப் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேலுமணி
மேலும், வேலுமணி இதற்கான முயற்சிகளை எடுப்பதையும் அவர் உறுதி செய்தார். அதாவது இதில் வேலுமணி எடுக்கும் முயற்சி என்பது களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் என்றும் ஒருவேளை விஜய் வந்தால் திமுகவை 10% தொகுதிகளுக்குள் முடக்கிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வர வேலுமணி கடைசிக் கட்ட முயற்சி எடுப்பது உறுதியாகியுள்ளது.
-
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications