Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 எழுத்து நடிகையின் பரபரப்பு புகார்.. நட்சத்திர தம்பதி பிரிந்த பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திர தம்பதியினர் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய என்ன காரணம் என விசாரித்தபோது அதன் பின்புலத்தில் 7 எழுத்து நடிகை இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். இதெல்லாம் ஏழைகளுக்கும், நடுத்தர வர்த்தகத்தினருக்கும் மட்டுமே பொருந்தக் கூடிய நிலை தற்போது எழுந்துள்ளது. வாழ்க்கை துணையுடன் சாதாரணமாக சண்டை ஏற்பட்டாலே கோர்ட் வாசலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என கவுண்டமணி காமெடி போல் சினிமா நட்சத்திரங்களிடையே விவாகரத்து என்பதும் சாதாரணம் என சொல்லப்படுகிறது. அண்மையில் பால் போன்ற குணமுடைய நடிகை தொடங்கி சாமந்தி பெயர் கொண்ட நடிகை வரை தங்கள் திருமண வாழ்வை முறித்துள்ளார்கள்.

விவாதம்

விவாதம்

இதற்கு காரணம் என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மக்களே கண், காது, மூக்கு வைத்து ஒரு காரணத்தை தயார் செய்துவிடுகிறார்கள். இது போன்ற விவாகரத்துகளால் ரசிகர்கள் பலர் அப்செட் ஆகிறார்கள். இன்னும் சிலர் இதெல்லாம் ஒரு விஷயமா விவாதிப்பதற்கு என கேட்டுவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள்.

ஆபாசம்

ஆபாசம்

எது எடுத்தாலும் விஜயம் எனும் இருந்த ஒரு இயக்குநருக்கும் பால் போன்ற மனதுடைய நடிகைக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் "ஷ்" நடிகருடன் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் "பாலில் ஆடை இல்லை" என கூறி அந்த தம்பதியின் வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. அது போல் ஆந்திரா கோங்குராவுக்கும் கேரளா புட்டிற்கும் இடையே காதலாகி கடைசியில் ஒரு படத்தில் அந்த கேரளா புட்டு ஆபாசமாக நடித்ததாக கூறி விவாகரத்து பெற்றது.

 பழமொழி

பழமொழி

இந்த நிலையில் ஒரு நட்சத்திர தம்பதியும் தங்கள் திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்து அறிவித்துள்ளார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் அண்ணாத்தனு கோடம்பாக்கத்தில் ஒருவரிடம் பேச்சு கொடுத்த போது அவர் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என நம்மை பார்த்து கேட்டார். அதற்கு நாமே "அண்ணே கீர்த்தி சிறிசானாலும் மூர்த்தி பெரிசுனு" சொல்லி வாயை பிடுங்கினோம்.

 டார்ச்சர்

டார்ச்சர்


அதாவது பிரிவினையை முதலில் அறிவித்த நட்சத்திர நடிகர், அவருடன் ரயில் தொடர்பான படத்தில் ஜோடியாக நடித்தவரை மிகவும் டார்ச்சர் செய்தாராம். வழக்கமாக எல்லா நடிகைகளுக்கும் அந்த நடிகர் செய்யும் டார்ச்சராக இருந்தாலும் விடிய விடிய கேரவனில் வைத்து டார்ச்சர் செய்தாராம். இதனால் என்னடா இது ஏற்கெனவே நமது அம்மா அந்த நடிகரின் குடும்பத்து சீனியரோடு ஜோடி போட்டு நடித்தவர். நமக்கே இந்த நிலையா? இதில் சினிமா பின்புலமே இல்லாமல் வரும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என புகைந்து கொண்டே இருந்தாராம்.

 ஷ் நடிகரின் மாமனார் படம்

ஷ் நடிகரின் மாமனார் படம்

பின்னர் அண்மையில் தீபாவளிக்கு வெளிவந்த அந்த "உஷ்" நடிகரின் மாமனார் நடித்த படத்தில் நடித்த போது மருமகனின் லீலைகளை மாமனாரின் காதில் போட்டுவிட்டாராம். அவ்வளவுதான் அவர் வந்து தனது மகளிடம் சொல்ல, பெயர், புகழ், காசு, பணம் என சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்தும் இப்படி செய்யலாமா என கேட்க, உடனே மகளும் தைரியலட்சுமியாக மாறி கணவனை கேட்டாராம்.

 என்ன காரணம்

என்ன காரணம்

அதற்கு அந்த உஷ் நடிகர் என்ன சொன்னார் தெரியுமா? இது என் இஷ்டம், என் விவகாரம், எனக் கூறி வாக்குவாதம் செய்ய, தகராறு பெரிதாகி பின்னர் பிரிந்து விடலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டாராம் அந்த ஸ்டாரின் மகள்! ஓ ஹோ அப்ப இந்த தம்பதி பிரிய 7 எழுத்து நடிகைதான் காரணமா என்று கேட்டபடி அங்கிருந்து நகர்ந்தோம். எல்லாத்தையும் சொல்லிட்டு இதை யார்கிட்டயும் ஓப்பனா சொல்லிடாதீங்கம்மான்னு நம்மகிட்ட சத்தியமும் வாங்கிட்டாரு அந்த கோடம்பாக்கத்து தகவல் களஞ்சியம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+