சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டை இடிப்பதுதான் திராவிட மாடலா? அந்த அமைச்சர் சப்பை கட்டு கட்டுறாருங்க! விளாசிய பாஜக அண்ணாமலை..!

Google Oneindia Tamil News

சென்னை : வீடுகளை இடிப்பதுதான் திராவிட மாடலா? கோட்டையிலிருந்து முதலமைச்சர் வெளியேறி மக்களை சந்திக்க வேண்டும் எனவும், ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பது தான் பாஜகவின் போராட்டத்திற்கு காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் தீக்குளித்து மரணமடைந்த கண்ணையனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியதோடு, அந்தப் பகுதியில் வீடு இழந்தவர்களிடமும் நிலைமை குறித்து விசாரித்தார்

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை," ஒரு தனி மனிதன், தனது சுய லாபத்திற்காக பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளார் என 2016ல் வீட்டு வசதி வாரிய செயலாளராக இருந்த தர்மேந்திர சிங் பிரசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

மக்கள் கோவிந்தசாமி நகரில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றிவிட்டு திராவிட மாடல் அரசியல் என்று சொன்னால் நம்ப முடியுமா ? வேதனையான துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்.ஏ புரத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் நீதிமன்றம் கூறியிருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கும் முறையாக வெளியேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது இதை கண்டிக்கதக்கது

இதுதான் திராவிட மாடலா?

இதுதான் திராவிட மாடலா?

குருவிக் கூட்டை களைத்தால் குருவி சும்மா இருக்காது என கண்ணையன் இறக்கும் முன் எனக்கு அனுப்ப வீடியோ எடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும், நேற்று முன்தினம் தான் குடும்பத்தினர் எனக்கு கவனத்தில் கொண்டு வந்தனர். கோவிந்தசாமி நகரில் உள்ள ஒவ்வொரு மக்களுடனும் பாஜக இருக்கும். ஊமை மக்களின் மீது அதிகார பலத்தை காட்ட வேண்டாம். இதுதான் திராவிட மாடல் அரசா என அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தீக்குளித்த கண்ணையன் உயிரிழப்பு தனி நீதிபதி முன்னிலையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். வீடுகளை இடிப்பதுதான் திராவிட மாடலா என கேள்வி

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாததால் கவர்னரிடம் முறையிட உள்ளோம். நாட்டிற்கே முன்மாதிரியாக மக்களை இங்கிருந்து கண்ணியமுடன் வெளியேற்றி இருக்கலாம் . சுயநோக்கத்திற்காக மக்கள் இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பிற்படுத்த ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இங்கு நிறைந்துள்ளனர். முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என கூறி வருகிறார் கோவிந்தசாமி நகரில் உள்ள வீட்டில் வந்து ஏன் முதல்வர் சாப்பிடவில்லை கோட்டையிலிருந்து முதலமைச்சர் வெறியேறி இப்பகுதி மக்களை சந்திக்க வேண்டும்

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆக இந்த ஆட்சி நடைபெறுகிறது ஏழைகளுக்காக இந்த ஆட்சி நடைபெறவில்லை. திருவாரூரில் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டாம் என சொல்லவில்லை சாலையே இல்லாத இடத்தில் சாலை அமைத்து கலைஞர் பெயர் வைத்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பது தான் பாஜகவின் போராட்டத்திற்கு காரணம். ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்க மாட்டோம் என கே.என் நேரு சொன்னதற்கு காரணம் என்ன ? அமைச்சர் கே.என் நேரு இந்த விஷயத்தில் சப்பைக்கட்டு கட்டுகிறார்" என பேசினார்.

English summary
Is demolition of houses the Dravidian model? Tamil Nadu BJP state president Annamalai has said that the Chief Minister should leave the fort and meet the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X