அன்பு ஒற்றுமை மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க உறுதியேற்போம்! முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

30 நாட்களாக விரதம் இருந்த கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளினை புனித வெள்ளியாகவும், உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கடைபிடிக்கின்றனர்.
இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி உலகெங்கிலும் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. இந்நிலையில்,வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும், கிறித்தவ பெருமக்களுக்கு, ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள்.
கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானைப் போற்றும் இன்னாளில், வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications