ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், வோட்வைப் 'வோட் டிராக்கர்' நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு ஸ்டாலின் மற்றும் எடப்பாடி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம் இதில் விஜய் மிகக் குறைவான ஆதரவையே பெற்றுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ், பாஜக தவிர பெரும்பாலும் அனைத்து கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.

தமிழ்நாடு தேர்தல்
தற்போதைய சூழலில் மாநிலத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணி மற்றும் நாதக, தவெக கட்சிகள் களத்தில் உள்ளன. 4 முனை போட்டி போலத் தெரிந்தாலும் தற்போது வரை வெளியான சர்வேக்களில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் கடும் போட்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
வோட்வைப் 'வோட் டிராக்கர்' நடத்திய சர்வே முடிவுகளை சிஎன்என்-நியூஸ்18 (CNN-News18) வெளியிட்டுள்ளது.. அதில் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் போட்டி மிகக் கடுமையாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 115 முதல் 125 இடங்களில் வெல்லும் என்றும் திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு 2- 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலின்
அதாவது போட்டி கடுமையாக உள்ள அதேநேரம் அதிமுகவுக்கு லேசான முன்னிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கே அதிக பேர் ஆதரவு கொடுத்துள்ளனர். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு 39.8% பேர் ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளனர். அவருக்குப் பின்னாலேயே மிக நெருக்கமாக 38.8% பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி 2வது இடத்தில் வருகிறார்.
விஜய்க்கு அதிர்ச்சி
ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் களமிறங்கும் தவெக தலைவர் விஜய்க்கு கடும் அதிர்ச்சியே இதில் காத்திருக்கிறது. விஜய் 3வது இடத்தில் இருந்தாலும் கூட வெறும் 13.6% மக்கள் மட்டுமே விஜய் முதல்வராக வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதர தலைவர்களுக்கு ஆதரவாக 4.2% பேர் கருத்து கூறியுள்ளனர். கருத்து இல்லை என 3.7% பேர் கூறியுள்ளனர்.
கடும் போட்டி
இந்த சர்வே முடிவுகளைப் பார்க்கும் போது சில விஷயங்கள் தெளிவாகப் புரிகிறது. அதாவது தேர்தல் களம் நெருக்கமாகவே இருக்கிறது. இடங்களில் அதிமுக கூட்டணியும், முதல்வர் வேட்பாளர் என்பதில் திமுக தலைவர் ஸ்டாலினும் முன்னிலை வகித்துள்ளது அதையே தான் காட்டுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரம் அல்லது சில ஆயிரம் வாக்குகளே இந்த முறை பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி












Click it and Unblock the Notifications