ரஜினிகாந்த் முதல் சரத்குமார் வரை! லோக்சபா தேர்தலில் காலையிலேயே வாக்களித்த நடிகர்களின் லிஸ்ட்
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் இதுவரை ஓட்டு போட்ட நடிகர், நடிகைகள் யார் யார் என்பது தெரியுமா?
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயல் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 1.58 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியதுமே முதல் ஆளாக அஜித் தனியாக வந்து வாக்கை செலுத்தினார். அவர் திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு நீல நிற ஜீன்ஸ் பேண்டை அணிந்திருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். கருப்பு எஸ்யூவி காரில் வந்தார். அது போல் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார்.
அது போல் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். மேலும் நடிகர் கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். தற்போது நடிகர் ரஜினிகாந்தும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications