அப்படி போடு.. நான் இனி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை! ட்விட்டரில் "அறிவித்த" எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்த அதிமுக பொறுப்பை நீக்கியுள்ளார்.
கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. குழப்பம், கூச்சல், பரபரப்பு என்று நிறைவடைந்த அந்தக் கூட்டத்தில், கட்சியின் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினர்.

இதனிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும்.
அதற்காக ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார். இதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஏன் ஓபிஎஸ் கடிதம் நிராகரிக்கப்பட்டது என்று விளக்க கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஓ.பன்னீர் செல்வத்தின் பொறுப்பு பொருளாளர் என்றும், தனது பொறுப்பு தலைமை நிலையச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக காரணம் கூறப்பட்டிருந்தது.
Recommended Video
இந்தநிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பயோவை மாற்றி தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார்.
-
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!











Click it and Unblock the Notifications