Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவைகள்! நிர்பயா நிதியில் சிசிடிவி! மாஸ் காட்டும் அமைச்சர் சிவசங்கர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவாக போக்குவரத்து வசதியை அங்கு ஏற்படுத்தி தர வேண்டும் என துறையின் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் துறையின் அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தி முடித்துள்ளார்.

இதேபோல் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிர்பயா நிதி மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்துத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் பொறுப்பேற்றதை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பொது போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இதற்கேற்ப போக்குவரத்துத் துறை அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கிராமங்களுக்கு பேருந்துகள்

கிராமங்களுக்கு பேருந்துகள்

மேலும், பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவாக போக்குவரத்து வசதியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், சென்னை மாநகரில் சிற்றுந்துகள் இயக்கவேண்டிய இடங்களை கண்டறிந்து தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவில் புதிய பேருந்து சேவைகள் வழங்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

கனவுத் திட்டம்

கனவுத் திட்டம்

இதேபோல் முதலமைச்சரின் கனவு திட்டமான, மகளிர் கட்டணமில்லா பயண சேவையில் எவ்வித குறைபாடுகளும், விமர்சனங்களும் இல்லாமல் இத்திட்டத்தை தனிக்கவனம் செலுத்தி மிகச் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கும், மண்டல இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் அறிவுரை

அமைச்சர் அறிவுரை

பேருந்து இயக்கத்தில் பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில், அதாவது விளம்பரம், தூதஞ்சல், பார்சல் சேவை மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து எவ்வாறு வருவாயினை பெருக்கிட வேண்டும் என இனம் கண்டு அவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கனிவுடன் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நிர்பயா நிதி

நிர்பயா நிதி

இதேபோல் "நிர்பயா" நிதி மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் செயலாக்கம் குறித்து போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததை கேட்டு அறிந்துகொண்டார் அமைச்சர் சிவசங்கர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+