பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இது.. உடனே பஸ் புக் பண்ணுங்க!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் இன்று முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது.
பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு பேருந்து: இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கடந்த முறை இயக்கப்பட்டன. 16,895 பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தற்போது பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு இயக்கப்பட உள்ளன.
புக்கிங் மையங்கள்: பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
எங்கிருந்து எல்லாம் இயங்கும்: கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி, 14ம் தேதி ஞாயிறன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்பின் வரிசையாக பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று 3 நாட்கள் விடுமுறை. சனிக்கிழமையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை உள்ளது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் தீபாவளியை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம்: தீபாவளியின் போது சிறப்பு பேருந்துகளை அதிக அளவில் இயக்கியது. அதோடு எல்லா பேருந்துகளையும் ஒரே இடத்தில் இருந்து இயக்காமல் வேறு வேறு ஏரியாக்களில் இருந்து கூட இயக்கியது. முக்கியமாக கிளாம்பாக்கத்தில் இருந்து கூட பேருந்துகளை இயக்கியது மிக சிறப்பான திட்டம் ஆகும். இதனால் பேருந்துகள் ஒரு இடத்தில் குவியவில்லை. மக்களும் எளிதாக பயணம் செய்ய முடிந்தது.
போக்குவரத்து நெரிசல் பெரிதாக ஏற்படவில்லை. சிட்டி உள்ளே டிராபிக் இல்லை. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை. அதேபோன்ற திட்டமிடல் பொங்கல் சமயத்திலும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications